பக்கம்:திரவிடத்தாய்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

றிந்நான் கெல்லை யகவயிற் கிடந்த நூலதின் முறையே வாலிதின் விரிப்பின்"


என்று காக்கைபாடினியாரும்,


"வடதிசை மருங்கின் வடுகு வரம்பாகத் தென்றிசை யுள்ளிட் டெஞ்சிய மூன்றும் வரைமருள் புணரியொடு பொருது கிடந்த நாட்டியல் வழக்கம்"


என்று சிறுகாக்கைபாடினியாரும்,


"வேங்கடங் குமரி தீம்புனற் பௌவமென் றிந்தான் கெல்லை தமிழது வழக்கே"


என்று சிகண்டியாரும்,


"தென்குமரி வடபெருங்கல் குணகுடகட லாவெல்லை"


என்று குறுங்கோழியூர்கிழாரும்,


"நெடியோன் குன்றமும் தொடியோள் பௌவமுந் தமிழ்வரம் பறுத்த தண்புனல் நன்னாட்டு"


என்று இளங்கோவடிகளும், இவ் வடிகளின் உரையில், "வடதிசைக்கண் வடுகொழிந்த திரிபுடைமொழி பலவுளவாக லான் மலையெல்லை கூறி ஒழிந்த திசை மூன்றிற்கும் திரிபின்மையாற் கடலெல்லை கூறினாரெனினு மமையும்" என்று அடியார்க்கு நல்லாருங் கூறியிருத்தலால், தொல்காப்பியர் காலத்தில் கன்னடந்தோன்றவில்லை யென்பதும், தெலுங்கு கொடுந்தமிழ் நிலையில் நின்ற தென்பதும், வேங்கட வெல்லைக்குத் தெற்கிலுள்ள நிலப்பகுதி முழுதும் செந்தமிழே வழங்கின தென்பதும் அறியப்படும். தெலுங்கு பிரிந்தது கி.பி. சுமார் 2ஆம் நூற்றாண்டு என்றும், கன்னடம் பிரிந்தது கி.பி. சுமார் 6ஆம் நூற்றாண்டு என்றும் கூறலாம்.

கொடுந்தமிழான திசைச்சொற்கட்குச் செப்பு சிக்கு அச்சன் முதலிய தெலுங்குச் சொற்களையும் கன்னடச் சொற்களையும் மலையாளச் சொற்களையும் எடுத்துக்காட்டாக இலக்கணவுரை யாசிரியரெல்லாம் தொன்றுதொட்டு மரபு முறையிற் கூறி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரவிடத்தாய்.pdf/26&oldid=1430606" இலிருந்து மீள்விக்கப்பட்டது