பக்கம்:திரவிடத்தாய்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

கோஒன் என்னும் எடுத்துக்காட்டும் கூறியிருப்பதால், தமிழிலும் முதற்காலத்தில் உடம்படுமெய்யின்றி யெழுதப் பட்டதென ஊகிக்கலாம்.

திரவிடம் தோன்றினது குமரிநாடாதலானும், குமரிநாட்டு மொழி தமிழேயாதலானும், திரவிடச் சொற்கட்கெல்லாம் பெரும்பாலும் வேர் தமிழிலேயே இருத்தலானும், தமிழ்ச்சொற்களிற் பெரும்பாலன இன்னும் தொல்லை வடிவிலேயே வழங்குதலானும், செய்யுள் வழக்கில் திரிந்துள்ள ஒருசில சொற்களும் உலக வழக்கில் இயல்பு வடிவில் இருத்தலானும், தமிழொலிகளெல்லாம் இயல்பும் தூய்மையுமா யிருத்தலானும், தமிழிலேயே திரவிட வேர்ப்பொருள் காண முடியும். இதைப் பிற்காட்டும் எடுத்துக்காட்டு விளக்கங்களால் படிப்போர் தாமே வெள்ளிடைமலையாய்க் காண்பர்.

11. கால்டுவெல் தமிழைப் சிறப்பித்துக் கூறுவன

"திராவிட மொழியும் கிளைமொழியுமான ஒவ்வொன்றின் இலக்கண அமைப்பையும் அதன்தன் தகுதிக்கும் ஆசிரியர்க்கு அதிலுள்ள பயிற்சிக்கும் தக்கவாறு மிகவோ குறையவோ ஆராய்ந்து விளக்கும்போதே, தாம் முப்பத்தேழாண்டுகட்கு மேலாகப் பயின்று வந்ததும் தம் மதத்தொண்டிற்குப் பயன்படுத்தியதும் திரவிட மொழிகளுட் பெரும்பாலும் முதன்முதற் பண்படுத்தப் பெற்றதும்தலைசிறந்த முறையில் வளர்க்கப் பெற்றதும் பலவகையிலும் திரவிடக் குடும்பத்திற்குப் பதின்மை தாங்குவதுமான, தமிழமைப்பை அடிக்கடி எடுத்துக் காட்டுவது ஆசிரியரின் சிறப்பு நோக்கமாகும்."

(திரவிட ஒப்பியல் இலக்கணம் - முன்னுரை, ப. 1)

"இக் குடும்பம் (திரவிடம்) ஒரு காலத்தில் ஐரோப்பிய ஆசிரியரால் தமிழியம் (Tamulian or Tamulic) என அழைக்கப்பட்டது. ஆனால், தமிழ் பெரும்பாலும் இக் குடும்பத்தில் மிகத் தொன்மையானதும் மிக வுயர்வாகப் பண்படுத்தப் பெற்றதும் இக் குடும்பத்திற்குரிய வடிவங்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரவிடத்தாய்.pdf/35&oldid=1430616" இலிருந்து மீள்விக்கப்பட்டது