பக்கம்:திரவிடத்தாய்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

றாழை, முள் + செடி = முட்செடி, நள் + பு = நட்பு, தாள் + துணை = தாட்டுணை, பொன் + குடம் = பொற்குடம், பின் + பாடு = பிற்பாடு, பொன் + தட்டு = பொற்றட்டு என்பன போன்றவையே பண்படுத்தமாகும். அன்பு + தளை = அற்புத்தளை என்பது செய்யுட்கே யுரியது. ஏனைத் தோன்றல் கெடுதல் ஆகிய இரண்டும் இயல்பாகவே நேர்ந்தன. தலை + கட்டு = தலைக்கட்டு என்று தமிழில் புணர்ந்தது தலகெட்டு என்று தெலுங்கில் வலிக்காது வழங்குகின்றதேயெனின் ஆரியத்திலும் ஆரியத் தன்மை சான்ற தெலுங்கிலுமுள்ள வல்லினங்களெல்லாம் தமிழ் வல்லினங்களின் இரட்டியாதலின், தலகெட்டு என்னும் தெலுங்குப் புணர்மொழி ஓசையில் தலைக்கட்டு என்னும் தமிழ்ப் புணர்மொழியை யொத்ததே யென்று கூறி விடுக்க.

தோன்றல் திரிபு தனித்தனி நின்ற சொற்களின் இணைப்பைக் காட்டுகிறது. சொல்லிணைப்பு பொருளிணைப்பைக் குறிக்கும். நிலைமொழியின் ஈற்றுவலி யிரட்டலும் இடைநின்ற மெலி வலித்தலும் இங்ஙனமே. வாழை, காய், காடு, ஆறு ; வேம்பு,இலை என்னும் சொற்கள் தனித்தனி நின்றபோது தனித்தனிப் பொருளையே உணர்த்தும். அவை, வாழைக்காய் காட்டாறு வேப்பிலை எனப் புணர்ந்த போதோ, வாழையின் காய், காட்டிலுள்ள ஆறு, வேம்பின் இலை என அவற்றின் பொருள்கள் தொடர்புபட்ட நிலையைக் காட்டும். முதன்முதல் இம் முறையைக் கையாண்டவர் பொதுமக்களே.

உயிரும் உயிரும் புணரும்போது யகரவகர உடம்படு மெய்கள் தோன்றுவது எம்மொழிக்கும் இயல்பாம். ஆனால், அதை வரிவடிவில் முதன் முதற் காட்டினவர் தமிழரே. தொல்காப்பிய எழுத்ததிகாரத்தில், 140ஆம் நூற்பாவுரையில் "வரையாரென்ற தனான் உடம்படுமெய் கோடல் ஒருதலையன்று. கிளி அரிது, மூங்கா இல்லை எனவும் வரும்" என்றும், 259ஆம் நூற்பாவுரையில் 'அதா அன்று' என்னும் எடுத்துக்காட்டும், 284ஆம் நூற்பாவுரை யில் பனாஅட்டு என்னும் எடுத்துக்காட்டும், 294ஆம் நூற்பாவுரை யில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரவிடத்தாய்.pdf/34&oldid=1430614" இலிருந்து மீள்விக்கப்பட்டது