பக்கம்:திரவிடத்தாய்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

கொச்சை வழக்கில், சொற்களின் னகரவீறுகள் 'ன்', 'ம்' என்னும் ஈரெழுத்திற் கிடைப்பட்ட ஒலியாயும், ஐகார வீறுகள் அகர எகர ஈறுகளாகவும் ஒலிக்கும்.

எ-டு: நான் - நா(ன்); விலை - வில, நடத்தை - நடத்தெ. இவை தமிழில் வழுவாம்; ஆனால், இந்தியிலும் பிற திரவிட மொழிகளிலும் வழாநிலையாம். அவர்கள் என்னும் சொல்லை அவக என்று ஒலிப்பர். இது தமிழில் வழுவாம். ஆங்கிலத்தில் வழா நிலையாம். (Pearl என்னும் சொல்லின் ரகத்தை நோக்குக). இங்ஙனம் தமிழுக்கு இயல்பும் வழாநிலையும் அடிப்படையாயின், பிறமொழிகட்குத் திரிபும் வழாநிலையும் அடிப்படையாம்.அவன், போயினான் என்னும் சொற்கள் தெலுங்கில் வாடு, போயினாடு எனத் திரிகின்றன. தமிழில் கான் என்பது காடு எனத் திரிந்து சிறிது பொருள் வேறுபடுகின்றது. ஆனால், வாடு, போயினாடு என்பன அங்ஙனமல்ல. வருது (வருகிறது), பேயும் (பெய்யும்) முதலிய வடிவுகளும் செந்தமிழ்க்குரியவல்ல.

மூரி (மூ - மூர் - மூரி) என்பது கிழ எருது. இதை மலையாளத் தில் எருது என்னும் பொருள்படப் பொதுப்பித்தல் (Generalisation) நுண்பொருள் விளக்கத்திற்கு மாறானது. ஒருவன் ஒருவனிடத்தில் ஒரு பொருளைக் கேட்கும்போது, இழிந்தோன் ஈ என்றும், ஒத்தோன் தா என்றும் உயர்ந்தோன் கொடு என்றும் கூற விதித்தனர் முன்னோர். ஆனால், இதைத் தமிழரும் தற்போது கைக்கொள்வதில்லை. நான் அவனுக்குத் தந்தேன். அவன் எனக்குக் கொடுத்தான் என்பன வினைவழாநிலைபற்றிய சொற்றொடர்கள்.

இனி, புணர்ச்சித் திரிபையும் பண்படுத்தத்தின் பாற்படுத் தலாம். மூவகைப் புணர்ச்சித் திரிபுகளுள், திரிதல் ஒன்றே பண்படுத்தத்தின்பாற்பட்டது. அதிலும், தேங்குடம் வேப்பிலை போன்ற திரிபுகள் அதன்பாற்படா. கண் + கடை = கட்கடை, மண் + தாழி = மட்டாழி, பல் + பொடி = பற்பொடி, கல் + பு = கற்பு, கல் + தாழை = கற்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரவிடத்தாய்.pdf/33&oldid=1430613" இலிருந்து மீள்விக்கப்பட்டது