பக்கம்:திரவிடத்தாய்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

என்னும் புராணத்தில், பிராமணர் பஞ்சாபினின்று பரசுராமரால் தென்கன்னடத்திலுள்ள கோகர்ணத்தில் முதல் முதல் குடியேற்றப் பட்டனர் என்னும் செய்தி கூறப்பட்டுள்ளது. இதை S. சீனிவாச ஐயங்கார் தமது 'தமிழாராய்ச்சி' (Tamil Studies) என்னும் நூலில் (ப. 348) மறுத்து, பிராமணரைக் கோகர்ணத்தில் குடியேற்றியவன் கடம்ப மரபினரின் முதல்வனான மயூரவர்மன் என்றும், அவன் காலம் கி.பி. 6ஆம் நூற்றாண்டின் முற்பகுதியென்றுங் கூறியுள்ளார். ஆண்டுக் காண்க.


மலையாளம் என்னும் பெயர் அண்மையில் தோன்றிய தாகும். சேரநாடு மலைநாடாதலால் சேரநாட்டான் மலையாளி யெனப்பட்டான். மலை+ஆளி=மலையாளி. ஆளி=ஆள். முதலாளி, தொழிலாளி, வங்காளி, பங்காளி முதலிய பெயர்களை நோக்குக. மலையாளியின் நாடும் மொழியும் மலையாளம் எனப்பட்டன.

ஒ. நோ : வங்காளி - வங்காளம்.

மலையாளத் திரிபு

சேரநாடு கி.பி. 10ஆம் நூற்றாண்டு வரை செந்தமிழரசரும் செந்தமிழ்ப் புலவரும் திகழ்ந்த செந்தமிழ் நாடாயிருந்தது.* ஐங்குறு நூறும் பதிற்றுப்பத்தும் ஆகிய கழக நூல்களும், சிலப்பதிகாரம் ஆகிய கழக மருவிய நூலும், புறப்பொருள் வெண்பா மாலையும், சேரமான் பெருமாள் நாயனாரின் ஆதியுலாவும், குலசேகர ஆழ்வாரின் பெருமாள் திருமொழியும் மலையாள நாடெனப்படும் சேர நாட்டில் எழுந்த செந்தமிழ் நூல்களே.

பதினாலாம் நூற்றாண்டில் (கி.பி. 1320)வீரராகவ சக்கரவர்த்தியால் பொறிக்கப்பட்ட கோட்டயம் செப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரவிடத்தாய்.pdf/43&oldid=1430624" இலிருந்து மீள்விக்கப்பட்டது