பக்கம்:திரவிடத்தாய்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

பேட்டு மொழி 'வாதில்' (வாயில்) 'ஒண்டாயில்' (உண்டாகில்), 'எழுந்நள்ளி' (எழுந்தருளி) முதலிய சில மலையாளத் திரிபுகளுடன் கூடிய தமிழே. அதே நூற்றாண்டில் (கி.பி. 1350) இயற்றப்பட்ட கண்ணசப் பணிக்கர் இராமாயண மொழியும் இத்தகையதே.

எ-டு: "கொண்டலிந் நேரிருண்டு சுருண்டு நீண்டொளி வார்ந்து திங்ஙும், குந்தள பாரமோடு முகில் குலத்திட மின்னல் போலே, புண்டரீகேக்ஷணந் நரிகெப் பொலிந்தவள சீத சொந்நாள்."

இதில், குந்தளபாரம் புண்டரீகேக்ஷணன் என்னும் இரண்டே வடசொற்கள். இவற்றுள்ளும் குந்தளம் என்பதுகூந்தல் - என்னும் தென்சொல் திரிபு: வார்ந்து - வார்ந்நு திணுங்கும் - திங்ஙும். இடை - இட. அருகே - அரிகெ.

போர்த்துக்கீசிய விடைத்தொண்டர் (Missionaries) முதன்முதல் மலையாளக் கரையில் வந்திறங்கினர் என்றும், மலையாள நாட்டு மொழியைத் தமக்கு முந்திய அரபியர் போல மலபார் என்றழைத்தனர் என்றும், கீழ்கரையிலும் இலங்கைக் கரையிலும் வழங்கிய மொழி (தமிழ்) அதை யொத்திருக்கக் கண்டு அதையும் அப் பெயரால் அழைத்தனர் என்றும் அவர்கள் மலையாளக் கரையிலுள்ள அம்பலக்காட்டில் 1577 அல்லது 9இல் முதன் முதல் தமிழெழுத்தில் அச்சிட்ட புத்தக மொழியை மலவார் அல்லது தமிழ்க (Malavar or Tamil) என்று குறித்தனர் என்றும் கால்டுவெல் கண்காணியார் கூறுகின்றார். (முன்னுரை பக். 10-12)

இதனால், 16ஆம் நூற்றாண்டுவரை மலையாள நாட்டு மொழி கொடுந்தமிழாயிருந்த தென்றும், அதன் பின்னரே வடமொழிக் கலப்பால் மலையாளமாகத் திரியத் தொடங்கிற் றென்றும் அறியலாம். மலையாளம் மிகத் தெளிவாய்ப் பிரிந்துபோனது 17ஆம் நூற்றாண்டில் (கி.பி. 1650) ஆரிய வெழுத்தை வகுத்தும், பெருவாரியாய் ஆரியச் சொற்களையும் விகுதிகளையும் புகுத்தியும், சேரநாட்டு மொழியைச் சிதைத்த துஞ்சத்து எழுத்தச்சனாலேயே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரவிடத்தாய்.pdf/44&oldid=1430625" இலிருந்து மீள்விக்கப்பட்டது