பக்கம்:திரவிடத்தாய்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

1860 ஆம் ஆண்டில்தான் முதல் மலையாள இலக்கணமும் எழுந்தது. 19ஆம் நூற்றாண்டுவரை மலையாளியர் தமிழையும் கற்றுவந்தனரென்றும் அதன் பின்புதான் அவ் வழக்கம் அடியோடு விடப்பட்டதென்றும் முதியோர் கூறுகின்றனர்.

மலையாள நாட்டில் பார்ப்பனரொழிந்த மற்றக் குலத்தா ரெல்லாம் தமிழர் அல்லது திரவிடரே. குயவர், பணிக்கர், பாணர், ஆயர், ஈழவர், கவுடர் (கவுண்டர்) முதலிய பல குலத்தினர் தமிழ்நாட்டிலும் உள்ளனர். நாயர், நாயாடி, வாரியர், செறுமன் முதலிய குலத்தினர் மலையாளத்திற்குச் சிறப்பாயிருந்த தாலும், அவர் குடிப்பெயரெல்லாம் தனித் தமிழே. தாழ்ந்தது உயர்ந்தது என்று முறையே பொருள் தரும் கிழக்கு மேற்கு என்னும் திசைப்பெயர்கள் குடமலைக் கீழ்நாட்டிற்கே ஏற்றவை. இவை மலையாளத்திலும் வழங்குவது மலையாளநாடு தமிழ்நாட்டுப் பகுதியே யென்பதையும் மலையாளியர் தமிழ் மரபினரே என்பதையும் உணர்த்தும். பிற்காலத்தில் மேற்குத் திசைக்குப் படுஞாயிறு என ஒரு பெயரை அவர்கள் புனைந்து கொண்டாலும், அதுவும் தனித்தமிழே என்பதை அறிதல் வேண்டும்.

மலையாள நாட்டு அல்லது சேரநாட்டுத் துறைமுகங்கள் பழந்தமிழ் நூல்களில் பெருங் கடல் வாணிக நிலையங்களாகக் கூறப்பட்டுள்ளன.


"செங்கோற், குட்டுவன் தொண்டி" (ஐங்.178)



"..........................................சேரலர் சுள்ளியம் பேரியாற்று வெண்ணுரை கலங்க யவனர் தந்த வியன்மாண் நன்கலம் பொன்னொடு வந்து கறியொடு பெயரும் வளங்கெழு முசிரி யார்ப்பென" (அகம்.148)



"கலந்தந்த பொற்பரிசம் கழித்தோணியாற் கரைசேர்க்குந்து மலைத்தாரமும் கடற்றாரமும், தலைப்பெய்து மருநர்க்கீயும் புனலங் கள்ளின் பொலந்தார்க் குட்டுவன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரவிடத்தாய்.pdf/45&oldid=1430626" இலிருந்து மீள்விக்கப்பட்டது