பக்கம்:திரவிடத்தாய்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

முழங்குகடல் முழவின் முசிரி யன்ன" (புறம். 343)



"இயற்றேர்க் குட்டுவன் வருபுனல் வாயில் வஞ்சி" (பத்.3)


மலையாள நாட்டிலுள்ள பல சிவநகரங்களும் விண் ணகரங்களும் நாயன்மாராலும் ஆழ்வாராலும் பாடப்பட் டுள்ளன. கோகர்ணம் திருச்செங்குன்றூர் (கொல்லத்திற் கருகிலுள்ளது) என்பன அப்பராலும் சம்பந்தராலும் 7ஆம் நூற்றாண்டிலும், திருவஞ்சைக்களம் சுந்தரரால் 9ஆம் நூற்றாண்டிலும், நேரிற் பாடப்பட்டுள்ளன. திருமுழிக்களம், திருநாவாய், திருவல்லவாழ் என்பன திருமங்கையாழ்வார் 8ஆம் நூற்றாண்டில் நேரிற் சென்று கண்டவை. இவற்றுடன் திருவனந்தபுரம், திருவண்பரிகாரம், திருக்காட்கரை, திருப்புலியூர், திருச்செங்குன்றூர், திருவண்வண்டூர், திருவத்தரு, திருக்கடித் தானம், திருவாறன்விளை என்பன நம்மாழ்வாரால் (கி.பி. 920) குறிக்கப்படுகின்றன. வித்துவக்கோடு குலசேகராழ்வாரால் 8ஆம் நூற்றாண்டிற் பாடப்பட்டது (தமிழாராய்ச்சி, ப. 347) மேற்கூறிய திருநகரங்கள் 10ஆம் நூற்றாண்டுவரை செந்தமிழ் நிலையங்க ளாயிருந்திராவிட்டால் பாடல் பெற்ற நகரங்களாயிரா என்பது திண்ணம்.

மலையாளத்திலுள்ள பழைமையான ஊர்ப் பெயர் களெல்லாம் இன்றும் தனித்தமிழாயே யிருக்கின்றன. கோடு (கோழிக்கோடு - Calicut), சேரி (தலைச்சேரி), குளம் (எர்ணாக் குளம்), புரம் (அங்காடிபுரம்), நாடு (வலையநாடு), ஊர் (கண்ணனூர்), குன்றம் (பூங்குன்னம்), கா (கன்னங்காவு), காடு (பாலைக்காடு - Palghat), குடி (சாக்குடி), வாசல் (பள்ளிவாசல்), அங்காடி (பரப்பனங்காடி), தோட்டம், பாடி, துறை (திருப்புனித்துறை), குறிச்சி, ஏரி, கரை (கொட்டாரக் கரை), களம் (திருவஞ்சைக் களம்), இருப்பு முதலியன தனித்தமிழ் ஊர்ப் பெயரீறுகளாம். கோடு = மலை. கா = சோலை.

பழஞ்சேரநாட்டின் கீழ்ப்பகுதியின் தென்பாகம் (கொங்கு நாடு) இன்றும் தமிழ்நாடா யிருக்கின்றது; வடபாகத்திற் கன்னடம் புகுந்துள்ளது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரவிடத்தாய்.pdf/46&oldid=1430627" இலிருந்து மீள்விக்கப்பட்டது