பக்கம்:திரவிடத்தாய்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

12ஆம் நூற்றாண்டில் கொடுந்தமிழ் நாடுகளாகக் குறிக்கப்பட்ட வேணாடு, பூழி நாடு, குட்ட நாடு, குட நாடு, மலை நாடு என்பன இற்றை மலையாள நாட்டுப் பகுதிகளாயுள்ளன.


"பூழியன் உதியன் கொங்கன் பொறையன் வானவன் கட்டுவன் வான வரம்பன் வில்லவன் குடநாடன் வஞ்சி வேந்தன் கொல்லிச் சிலம்பன் கோதை கேரளன் போந்தின் கண்ணிக்கோன் பொருநைத் துறைவன் சேரன் மலையமான் கோச் சேரன் பெயரே"


என்பது திவாகரம்.

இவற்றுள் கொங்கன், கொல்லிச் சிலம்பன், பொருநை (ஆன்பொருநை)த் துறைவன் என்னும் பெயர்கள், கோயம்புத்தூர் சேலம் ஆகிய இரு கோட்டகங்களும் சேரநாட்டைச் சேர்ந்தன என்பதை விளக்கும். கொங்கன் = கொங்கு நாட்டரசன். கொங்கு நாடு கோயம்புத்தூர்க் கோட்டகப் பகுதி. கொல்லிமலை சேலங் கோட்டகத்தைச் சேர்ந்தது. சேரர் குடியில் ஒரு கிளையினரான அதிகமான் மரபினர் சேலத்தைச் சேர்ந்த தகடூரை (தர்மபுரியை)த் தலைநகராகக் கொண்டு ஆண்டனர்.

குற்றியலுகரத்தைப் புள்ளியிட்டுக் காட்டல், திதியைப் பக்க மென்றல் முதலிய பழந்தமிழ் வழக்கங்கள் இன்றும் மலையாள நாட்டில் தானுள்ளன.

தொன்றுதொட்டுச் சேரநாட்டு மெலித்தல் திரிபு சொற்கள் சில சோழ பாண்டி நாடுகளிலும் இருவகை வழக்கிலும் வழங்கி வருகின்றன.

எ-டு: 'திரிநவும்' (தொல்.83) பழனி, (புறம் 113) பழுனிய (மணி,328) 'அறியுனன்' (புறம் 134) (திரிகின்ற திரிகுன்ன - திரியுன்ன - திரியுன-திரின-திரிந) 'பழுத்து - பழுன்னு - பழுன்னு' - பழுநி - பழுதி, மகிழ்கின்றான் - மகிழுன்னான் - மகிழுநன் - மகிழ்நன். வாழ்கின்றான் - வாழுன்னான் - வாழுநன் - வாழ்நன் - வாணன். இனி, திரியும் - திரியுன் + அ = திரியுன - திரின - திரிந என்றுமாம். இங்ஙனமே பிறவும், னகரத்தி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரவிடத்தாய்.pdf/47&oldid=1430628" இலிருந்து மீள்விக்கப்பட்டது