பக்கம்:திரவிடத்தாய்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

னும் நகரம் முந்தினதெனக் கொள்ளவும் இடமுண்டு. ஆங்கனம் - அங்கனம் - அங்ஙனம் - அன்னணம்.


"ஆஓ வாகும் பெயருமா ருளவே. ஆயிடன் அறிதல் செய்யு ளுள்ளே (தொல். 680)


என்று கூறியதும் சேரநாட்டிற்கே சிறப்பாய் ஏற்கும்.

இவற்றால், பண்டை முத்தமிழ் நாட்டுத் தொடர்பையும், சேரநாட்டு வினைமுற்றுகள் பாலீறு பெற்றதையும் அறியலாம்.


".....வண்டமி ழிகழ்ந்த காய்வேற் றடக்கைக் கனகனும் விசையனும் செங்குட்டு வன்றன் சினவலைப் படுதலும்"


என்று சிலப்பதிகாரத்திலும்,


"வடதிசை யெல்லை யிமய மாகத் தென்னங் குமரியொ டாயிடை யரசர் முரசுடைப் பெருஞ்சமந் ததைய வார்ப்பெழச் சொல்பல நாட்டைத் தொல்கவி னழித்த போரடு தானைப் பொலந்தார்க் குட்டுவ" (பதித். 43)


என்று பதிற்றுப்பத்திலும் பாடப்பட்டுள்ள சேர நாட்டுச் சீரிய மறம் இன்று ஆரிய அடிமைப்பட்டு அணுவளவுத் தமிழுணர்ச்சி யின்றிக் கிடப்பது நினைக்குந்தோறும் நெஞ்சைப் புண் படுத்துவதா யிருக்கின்றது.

மலையாளம் திரிந்ததற்குக் காரணங்கள் (1) சேரநாடு பெரும்பாலும் மலைத்தொடரால் தடுக்கப் பட்டுப் பிற தமிழ் நாடுகளுடன் பெருந் தொடர்பு கொள்ளாதிருந்தமை. (2) 12 ஆம் நூற்றாண்டோடு பாண்டிய மரபும் 13ஆம் நூற்றாண்டோடு சோழ மரபும் சேர மரபுடன் மணவுறவு நிறுத்தியமை. (3) வடமொழிக்கும் வடமொழியாளர்க்கும் தெய்வ உயர்வு கற்பிக்கப்பட்டமையும் வரம்பிறந்த வடசொற் கலப்பும். (4) மிகு மழையால் மலையாளியர்க்கு மூக்கொலி சிறந்தமை. (5) மலையாளியர் முன்னோரின் செந்தமிழ் நூல்களைக் கல்லாமை. (6) மலையாளியரின் ஒலிமுறைச் சோம்பல்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரவிடத்தாய்.pdf/48&oldid=1430634" இலிருந்து மீள்விக்கப்பட்டது