பக்கம்:திரவிடத்தாய்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

மலையாளம் திரிந்த முறைகள் (1) முற்றுவினைகள் பால் காட்டும் ஈறிழத்தல் எ-டு: வந்தான் - வந்து. (2) மெலித்தல் திரிவு எ-டுஎழுந்து-எழுந்நு, அங்கு-அங்ஙு, கழுகு - கழுங்ஙு, குஞ்சி-குஞ்ஞி, வீழ்ந்து-வீணு. (3) நிகழ்கால வினைமுற்றின் கின்றது என்னும் இடைநிலை உன்னு எனத் திரிதல் எ-டு:செய்கின்ற - செய்குன்னு - செய்யுன்னு. (4) வேற்றுமை யுருபுத் திரிவு. எ-டு:அதினுக்கு - (அதின்கு) - அதின்னு, உடைய - உடே- டே - றே. (5) போலித் திரிவு எ-டு:நரம்பு - ஞரம்பு, செய்ம்மின் - செய்வின்.

(6) கொச்சைத் திரிவும் தொகுத்தலும் எ-டு: உள்ள - ஒள்ள, மலை - மல, அகற்றுக-அகத்துக, இரு-இரி, புறா - ப்ராவு, கனா - கினாவு, வேண்டும் - வேணம், செய்யவேண்டும் - செய்யேண்டு, போக வேண்டும் - போகேணம். (7) றகர ரகர வேறுபாடின்மை எ-டு: உறவு - உரவு. (8) நிகழ்கால வினையெச்சத்திற்குப் பதிலாக 'வான்' 'பான்' ஈற்று வினையெச்சங்களும் அவற்றின் திரிபுகளும் வழங்கல். எ-டு: குடிப்பான் = குடிக்க, நடப்பான் - நடக்கான் = நடக்க, வருவான் = வர. (9) சிறப்புச் சொற்கள் பொதுப் பொருளில் வழங்கல் எ-டு: வெள்ளம் (புதுப் பெருக்கு நீர்), = நீர். மூரி (கிழஎருது) = எருது, நோக்கு (கூர்ந்து பார்) = பார். (10) சொற்களை ஒருமருங்கு பற்றிய பொருளில் வழங்கல் எ-டு: அதே = ஆம், வளரே = மிக, மதி = போதும்; வலிய = பெரிய.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரவிடத்தாய்.pdf/49&oldid=1430637" இலிருந்து மீள்விக்கப்பட்டது