பக்கம்:திரவிடத்தாய்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

"மேற்குப் பவளமலை வேங்கட நேர்வடக்காம் ஆர்க்கு முவரி யணிகிழக்கு - பார்க்குளுயர் தெற்குப் பினாகி திகழிருப தின்காதம் நற்றொண்டை நாடெனவே நாட்டு."

"வடக்குத் திசைபழனி வான்கீழ்தென் காசி குடக்குத் திசைகோழிக் கோடாம் - கடற்கரையின் ஓரமோ தெற்காகு முள்ளெண் பதின்காதம் சேரநாட் டெல்லையெனச் செப்பு"

என்னும் கம்பர் செய்யுட்களானறிக.

இற்றைநிலையிலோ, சேரநாட்டின் மேல்பாகம் முழுதும் மலையாள நாடாயும் கீழ்பாகத்தின் வடபகுதி கன்னட நாடாயும் மாறியிருப்பதுடன் சோழநாட்டின் வடமுனைப் பகுதி (தொண்டை நாட்டுப் பல்குன்றக் கோட்டம்) தெலுங்கிற் கிடந்தந்து இருமொழி நாடாய் வேறுபடுகின்றது.

உண்மையில் ஒரு பெருமையுமில்லாத புன்சிறு புது மொழிகளை யெல்லாம் அவ்வம் மொழியார் பலபடப் பாராட்டி வளர்த்து வருகையில், பல வகையில் தலைசிறந்த தனிப்பெருந் தாய்மொழியாகிய தமிழைத் தமிழர்நெகிழவிடுவதும், எங்கெழிலென் ஞாயிறெமக் கென்றிருப்பதும், தமிழப் பிறப்பிற்கு முற்றும் தகாத செய்தியாம்.

தமிழையும் பிற திரவிடமொழிகளையும் ஆராய்வதால் தமிழின் சிறப்பையும் பழந்தமிழரின் பெருமையையு மறிவதுடன், உலக முழுதுந் தழீஇய குலநூல் (Ethnology), வரலாற்றுநூல் (History), மொழிநூல் (Philology) ஆகிய முக்கலை களின் திறவுகோலையும் காணப் பெறுவதாயிருத்தலின், இனிமேலாயினுந் தமிழர் தம் கடமை யுணர்ந்து கடைப்பிடிப்பாராக.

எனது ஒப்பியன் மொழி நூலின் முதன் மடல் 3ஆம் பாகத்தின் பிற்பகுதி யாய் வெளிவரும் இந் நூல், தமிழே திரவிடத் தாய் என்று நாட்ட வெழுந்தது. இதை நடுவுநிலையாய்ப் படிப்பார்க்கெல்லாம் இவ்வுண்மை புலனாகுமென்பது திண்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரவிடத்தாய்.pdf/5&oldid=1430497" இலிருந்து மீள்விக்கப்பட்டது