பக்கம்:திரவிடத்தாய்.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

முகவுரை

முறைப்பெயர்களும் தமிழ்ச் சொற்களாய் அல்லது தமிழ் வேரடிப் பிறந்தனவாயிருப்பதையும், சென்ற நூற்றாண்டில் தெலுங்கு நாட்டிற்கும் கன்னட நாட்டிற்கும் சென்ற தமிழ்க் குறவர் (எறுக்கலவாரு அல்லது கொரவரு) கூட, இன்று தமிழைத் தெலுங்கும் கன்னடமும் போல ஒலித்துப் பேசுவதையும், நோக்குமிடத்துத் தமிழிற் புணர்ச்சியும் பருசொன்னிலையும் தோன்றாத தொன்முது காலத்தில், தமிழே இந்தியா முழுதும் தனிப் பேராட்சி பெற்றிருந்தமை புலனாம்.

தட்ப வெப்ப நிலையினாலும், ஒலிமுறைச் சோம்பலினாலும், இலக்கிய விலக்கண அணைகரை யின்மையாலும், ஆரியக் கலப்பினாலும், தமிழாவிழிப்பின்மையாலும், நாவலந் தீவு முழுவதும் ஒருதனியாய் வழங்கிய முதுபழந்தமிழ், பல்வேறு மொழிகளாய்ப் பிரிந்து, வடநாட்டில் ஆரியமயமாயும் தென்னாட்டில் ஆரியக் கலப்பினதாயும் வேறுபட்டதுடன், ஆரியச்சார்பு மிக்க திராவிட மொழிகள் மேன்மேலும் தமிழை நெருக்கி நெருக்கித் தெற்கே தள்ளிக்கொண்டே வருகின்றன.

"நெடியோன் குன்றமும் தொடியோள் பௌவமுந் தமிழ்வரம் பறுத்த தண்புனல் நன்னாட்டு" என்னும் இளங்கோவடிகள் கூற்றால், கி.பி.2ஆம் நூற்றாண்டு வரை வேங்கடத்தை வடவெல்லையாகக் கொண்ட தென்னாடு முழுதும் பிறமொழி வழங்காத தமிழ்நாடாயிருந்தமை புலனாம். ஆனால், 12ஆம் நூற்றாண்டில் சேரநாட்டின் வடபாகத்திற் கன்னடம் புகுந்துவிட்டது. இதை, "வெள்ளா றதுவடக்கா மேற்குப் பெருவழியாம தெள்ளார் புனற்கன்னி தெற்காகும் - உள்ளார ஆண்ட கடல்கிழக்கா மைம்பத் தறுகாதம் பாண்டிநாட் டெல்லைப் பதி."

"கடல்கிழக்குத் தெற்குக் கரைபொருவெள் ளாறு குடதிசையிற் கோட்டைக் கரையாம் - வடதிசையில் ஏணாட்டுப் பண்ணை யிருபத்து நாற்காதம் சோணாட்டுக் கெல்லையெனச் சொல்."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரவிடத்தாய்.pdf/4&oldid=1430453" இலிருந்து மீள்விக்கப்பட்டது