பக்கம்:திரவிடத்தாய்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

கன்னட நாட்டு வரலாறு

கன்னட நாட்டிற் சிறந்த பகுதி மைசூர்ச் சீமையாகும். மைசூரில் தற்போது ஹளெபீடு (Halebid) என வழங்கும் துவரை நகா (துவார சமுத்திரம்) கி.மு. 2000 ஆண்டுகட்கு முன்னர்ச் செந்தமிழ் நாட்டைச் சேர்ந்ததாயிருந்தது. இது துவராபதி எனவும் வழங்கும்.

நச்சினார்க்கினியர், "அகத்தியனார்..............துவராபதிப் போந்து நிலங்கடந்த நெடுமுடியண்ணல் வழிக்கண் அரசர்பதினெண்மரையும் பதினெண்குடி வேளிருள்ளிட்டாரையும் அருவாளரையுங் கொண்டு போந்து காடுகெடுத்து நாடாக்கி" எனத் தொல்காப்பியப் பாயிரவுரையிலும், "மலைய மாதவன் நிலங்கடந்த நெடுமுடியண்ணலுழை நரபதியருடன் கொணர்ந்த பதினெண்வகைக் குடிப்பிறந்த வேளிர்க்கும்" என அகத்திணை யியல் 32 ஆம் நூற்பாவுரையிலும் கூறியுள்ளார்.

பண்டைச் சேரநாட்டில் மைசூர்ச் சீமையின் தென் பகுதியும் சேர்ந்திருந்தது.

கடைக்கழகக் காலத்தில் மைசூர்த் துவரைநகரை ஆண்டவன் இருங்கோவேள் என்னும் தமிழச் சிற்றரசன். அவன் வடபக்கத்தில் ஒரு முனிவரின் ஓம குண்டத்தில் தோன்றித் துவரை நகரை நாற்பத்தொன்பது தலைமுறையாகத் தொன்றுதொட்டு ஆண்டுவந்த வேளிர்களுள் ஒருவன் என்றும், ஒரு முனிவர் தவஞ்செய்து கொண்டிருக்கையில் அவர்க்கு இடையூறு செய்யவந்த ஒரு புலியை அவர் ஏவற்படி கொன்றமையால் புலிகடிமால் எனப்பட்டா னென்றும் கூறப்படுவன்.


"நீயே, வடபான் முனிவன் தடவினுட் டோன்றிச் செம்புபுனைந் தியற்றிய சேணெடும் புரிசை உவரா வீகைத் துவரை யாண்டு நாற்பத் தொன்பது வழிமுறை வந்த வேளிருள் வேளே விறற்போ ரண்ணல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரவிடத்தாய்.pdf/66&oldid=1430700" இலிருந்து மீள்விக்கப்பட்டது