பக்கம்:திரவிடத்தாய்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

தாரணி யானைச் சேட்டிருங் கோவே ஆண்க னுடைமையிற் பாண்கட னாற்றிய ஒலியற் கண்ணிப் புலிகடி மாஅல்" (புறம். 201)


என்று கபிலர் பாடுதல் காண்க.

இப் பாட்டின் அடிக்குறிப்பில், "தபங்கரென்னு முனிவர் ஒரு காட்டில் தவஞ்செய்கையில் ஒரு புலி அவர்மேற் பாய்தற்கு நெருங்க, அதுகண்ட அம் முனிவர் அங்கு வேட்டையாடி வந்த சளனென்னும் யாதவ அரசனை நோக்கி ‘ஹொய் ஸள' என்று கூற, அவன் அப் புலியைத் தன் அம்பால் எய்து கடிந்தமையால் ஹொய்ஸளனென்றும் புலிகடிமாலென்றும் வழங்கப்பட்டா னென்று சிலர் கூறுவர்; சளகபுரத்தையடுத்த காட்டிலுள்ள தன் குலதேவதையான வாஸத்திகா தேவியைச் சளனென்னும் அரசன் வணங்கச் சென்றபோது புலியால் தடுக்கப்பட்டு வருந்துகையில், அக் கோயிலிலிருந்த பெரியவர் அவனை நோக்கி 'ஹொஸ் ஸள' என்று கூறி ஓர் இரும்புத் தடியை அருள, அவன் அதுகொண்டு அதனைக் கொன்றமைபற்றி, 'ஹொய் ஸளன்' என்றும் 'புலிகடிமால்' என்றும் பெயர் பெற்றனனென்று வேறு சிலர் கூறுவர்" என்று சாமிநாதையர் அவர்கள் வரைந்துள்ளனர்.

பிற்காலத்தில் 11ஆம் நூற்றாண்டில் துவாரசமுத்திரத்தில் (Halebid) நிறுவப்பட்ட ஹொய்சள பல்லாள மரபு கடைக்கழகக் காலப் புலிகடிமாலின் வழியதே. பல்லாளன் என்னும் பெயர் வல்லாளன் என்னும் தமிழ்ச்சொல்லின் திரிபு. வ-ப, போலி, ஒ,நோ: வண்டி - பண்டி, வகு-பகு, வல்லாளன் = வலிய ஆண்மையை யுடையவன். ஒரு மறவனுடைய இல்லையும் ஊரையும் இயல்பையும் சொல்லி அவன் ஆண்மைத் தன்மையை மிகுத்துக் கூறும் புறத்துறைக்கு வல்லாண்முல்லை (பு.வெ. 177) என்று பெயர்.


"நள்ளாதார் மிடல்சாய்த்த வல்லாளநின் மகிழிருக்கையே" (புறம். 125)


எனத் தேர்வண்மலையனும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரவிடத்தாய்.pdf/67&oldid=1430701" இலிருந்து மீள்விக்கப்பட்டது