பக்கம்:திரவிடத்தாய்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

(2) முதனிலை திரிந்த தொழிற்பெயர் எ-டு: கேடு, ஈடு. (3) முதனிலை திரிந்து விகுதிபெற்ற தொழிற்பெயர் எ-டு: தாஹ (தாகம்). (4) முதனிலை வலி யிரட்டித்த தொழிற்பெயர் எ-டு: ஊட்டெ (ஊற்று, ஆகுபெயர்). (5) முதனிலை திரிந்து வலி யிரட்டித்த தொழிற்பெயர் எ-டு: குதி - கூத்து (6) முதனிலை வலி யிரட்டித்து விகுதி பெற்ற தொழிற் பெயர் எ-டு: ஆட்ட (ஆட்டம்). (7) விகுதிபெற்ற தொழிற்பெயர் எ-டு:விகுதி பெயர் பொருள் கெ (கை)

அடிகெ

(அடுகை = சமைத்தல்) தெ (தை)

நடத்தெ

(நடத்தை) ஊ (உள்)

பெளெயு

(விளையுள்) அலு (அல்)

பிக்கலு

(விக்கல்) வு (உ)

அடவு

(அடைவு), சாவு. பு

அதிர்ப்பு

அண (அணம்)

கட்டண

(கட்டணம்) பி (வி)

கல்பி

(கல்வி)

(8) முதனிலை வலித்து விகுதிபெற்ற தொழிற்பெயர் எ-டு: பழக்கெ (வழக்கம்), அடக்க (அடக்கம்). (9) பகுதி வழக்கற்ற தொழிற்பெயர் எ-டு: கட்டளை.

சில தொழிற்பெயர்கள்

ஓணகிலு (உணக்கம்), ஒளவு (உளவு), ஏலாம் (ஏலம்), ஓட்ட (ஓட்டம்), ஒப்பிடி (ஒப்படி = அறுவடை), ஒப்பந்த, ஒப்ப (ஒப்பம்), ஓக்கரி (ஒக்காளம்), ஜூது (சூது), தப்படி (தவறு) தாட்டவாட்ட (தாட்டோட்டம்), தீர்ப்பு, தீர்மான (தீர்மானம்), அம்மாலெ (அம்மானை).

வினையாலணையும் பெயர்

நோடிதவனு (பார்த்தவன்), நோடுவவனு (பார்க்கிற வன்), (பார்ப்பவன்) முதலியன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரவிடத்தாய்.pdf/80&oldid=1430730" இலிருந்து மீள்விக்கப்பட்டது