பக்கம்:திரவிடத்தாய்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

தெலுங்குநாட்டு வரலாறு

முதன் முதன் தெலுங்குநாட்டைப் பற்றிக் குறிப்பாகத் தெரிவிப்பது தொல்காப்பியம்.


"வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறும் நல்லுலகத்து"


என்னும் தொல்காப்பியச் சிறப்புப் பாயிரத்தாலும்,


"செந்தமிழ் நிலஞ்சேர் பன்னிரு நிலத்தும் தங்குறிப் பினவே திசைச்சொற் கிளவி"


என்னும் தொல்காப்பிய நூற்பாவின் உரையாலும்,


"வடதிசை மருங்கின் வடுகு 1 வரம்பாகத் தென்றிசை யுள்ளிட் டெஞ்சிய மூன்றும்"


என்னும் சிறுகாக்கைபாடினியார் கூற்றாலும்,

தொல்காப்பியர் காலத்தில் வேங்கடத்திற்கு வடக்கில் கொடுந்தமிழ் வழங்கிற்றென்றும், அது பின்பு திரிந்து வடுகு (தெலுங்கு) என்னும் கிளைமொழி யாயிற்றென்றும் அறியலாம்.

கலிங்கத்திற்கு வடக்கில் ஆந்திரம்1 என ஒரு தெலுங்கு நாடிருந்ததென்றும், ஓர் ஆந்திர அரச மரபினர் வட இந்தியாவையும் ஆண்டு வந்தனரென்றும், வடமொழி இருக்கு வேத ஐத்திரேய பிரமாணத்தாலும் இதிகாச புராணங்களாலும் அறியக் கிடக்கின்றது. ஆந்திரரை ஐத்திரேய பிரமாணம் அநாகரிகராகக் குறிப்பிடினும் பிளினி, ஒரு வலிமைமிக்க நாட்டாராகக் கூறியுள்ளார். 'பியூட்டிங்கர் பட்டிகை'களிலும் (Pautinger Tables) ஆந்திரர் குறிக்கப்படுகின்றனர். சேரன் செங்குட்டுவனுக்கு வடநாட்டுச் செல

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரவிடத்தாய்.pdf/90&oldid=1430752" இலிருந்து மீள்விக்கப்பட்டது