பக்கம்:திரவிடத்தாய்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

தெலுங்குச்சொல் வரிசைகள்

1. பெயர்ச் சொற்கள்

1. மூவிடப் பெயர் (இடம் தமிழும் வலம் தெலுங்கும்)

யான், நான் - நேனு; யாம் - மேமு; நாம் - மனமு; நீன், நீ - நீவு; நீர் - மீரு; அவன் - வாடு; அவர் - வாரு; அது - அதி (அவள், அது); அவை - அவி; தான் - தானு; தாம் - தாமு தமரு.

2. வினாப் பெயர்

எவன் - எவடு; எவர் - எவரு; ஏது > எது; ஏதி (எவன் எது); எவை - ஏவி.

3. முறைப் பெயர்

தாத்தா - தாத்த; தந்தை - தண்ட்ரி; அண்ணன் - அன்ன; தம்பின், தம்பி - தம்முடு; மாமன் - மாம; பிள்ளை - பிட்ட, பில்ல; அவ்வை - அவ்வ; தள்ளை - தல்லி; அக்கை - அக்க; அத்தை - அத்த; பிடுகு - கொடுக்கு, அப்பன் - அப்ப.

4. விலங்குப் பெயர்

ஆ - ஆவு; எருது - எத்து; எருமை - எனுகு; குக்கல் - குக்க; கழுதை - காடிதெ; குதிரை - குர்ரமு; கிடாரி - கேதெ; பன்றி - பந்தி; ஏழகம் - ஏலிக்க; கொறி - கொர்ரெ; புலி - புலி; எண்கு - எலுகு; யானை - ஏனுக; நரி - (நரிக) நக்க; சிவிங்கி - சிவங்கி.

5. பறவைப் பெயர்

கோழி - கோடி; ஈ - ஈக; வாத்து - பாத்து; மயில் - நெமலி; காக்கை - காக்கி; மின்வெட்டும் பூச்சி - மினுகுருப்பூச்சி; புறவம் - பாவுரமு; தேனீ - தேனெட்டீக; கொக்கு - கொங்க்க; கூகை - கூப; உள்ளான் - உள்ளங்கி.

6. ஊர்வனவற்றின் பெயர்

பாம்பு - பாமு; பேன் - பேனு; பல்லி - பல்லி; புழு - புருகு, புருவு; தேள் - தேலு; மூங்கா - முங்கீசு; எலி - எலுக; சுண்டு (எலி) - சுஞ்சு.

7. நீர்வாழ்வனவற்றின் பெயர்

மீன் - மீனு; சுறா - சோர; முதலை - மொசலி; நண்டு - எண்ட்ரி; சிப்பி - சிப்பி; நத்தை - நத்த; நீர்நாய் - நீருக்குக்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரவிடத்தாய்.pdf/96&oldid=1430759" இலிருந்து மீள்விக்கப்பட்டது