பக்கம்:திரவிடத்தாய்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

8. மரஞ்செடிப் பெயர்

மரம் - ம்ரானு; செடி - செட்டு; சீத்தா - சீத்தா; வேம்பு; வேமு; அத்தி - அத்தி; அரசு - ராய்; பலா - பனச; அன்னாசி; அன்னாச; மா - மாமிடி; தாளி - தாட்டி; அரம்பை - அரட்டி;தெங்கு - தெங்காயச்செட்டு; வாதுமை - பாதமு; வெதிர் (மூங்கில்) - வெதுரு; மல்லிகை - மல்லிக்க; தாமரை - தாமர; நாற்று - நாறு; புதர் - பொத; புல் - புல்லு; பாசி - பாச்சி, அகில் - அகரு.

9. கருவிப் பெயர்

ஆணி - ஆணி; காறு - கர்ரு; கத்தி - கத்தி; கத்தரி - கத்திரி; கோடாலி - கொட்டலி; கரண்டி - கரிட்டெ; ஈட்டி - ஈட்டெ; அலகு - அலுகு, ஆக்கு; கறுழ் - கள்ளெமு; முள் - முள்ளு; துப்பாக்கி -துப்பாக்கி; அகப்பை - அப்பக்க; கேடகம் - கேடெமூ; சல்லடை - சல்லெட; நிறுவை (தராசு) - நிலுவ; கதிர் - கதுரு; வில் - வில்லு; கோல் - கோல; கம்பி - கம்மி; கட்டை - கட்டெ; அம்பு - அம்மு; வாணம் - பாணமு; பீரங்கி - பிரங்கி; வல்லயம் - பல்லெமு; செக்கு - செக்கு; உரல் - ரோலு; நாஞ்சில் - நாகேலு; திரிகல் - திருகல்லு; முசலம் (உலக்கை) - முசலமு; கொடுவாள் - கொடவலி; அரம்பம் - ரம்பமு; உளி - உலி; கட்டாரி - கட்டாரி, வாள் - வாலு, அங்குசம் - அங்குசமு.

10. ஐம்பூதப்பெயர்

நிலம் - நேல; நீர் - நீரு; நெருப்பு - நிப்பு; கால் - காலி, ஆவி - ஆவி; விண் - வின்னு, வினு.

11. உலோகப் பெயர்

இரும்பு - இனுமு; உருக்கு - உக்கு; வெள்ளி - வெண்டி; வங்காரம் - பங்காரு; பித்தளை - இத்தடி; (எர்) இராகி - ராகி (செம்பு), தகரம் - தகரமு.

12. ஊர்திப் பெயர்

வண்டி, பண்டி - பண்டி; ஓடம் - ஓட; படகு - படவ; நாவாய் - நாவ; தோணி - தோனெ; சிவிகை - சிபுக்க; பாடை - பாட; தேர் - தேரு.

13. உணவுப்பெயர்

தோசை - தோச; இட்டலி - இட்டென; பச்சடி - பச்சடி; இரை - எர; தீனி - தீனி; தின்றி - திண்டி; உப்பு - உப்பு, பால் - பாலு; வெண்ணெய் - வென்ன; அப்பம் - அப்பமு; கஞ்சி - கஞ்சி; நெய் - நேயி; தேன் - தெனெ; தவிடு - தவுடு; பருப்பு -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரவிடத்தாய்.pdf/97&oldid=1430760" இலிருந்து மீள்விக்கப்பட்டது