உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திராவிட இயக்கம்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9



நீரோட்டத்தால் இழுக்கப்படுகின்ற நிலையில் கரையேறுவதற்கு முயல்வதைப் போல, காலவேகத்துடன் போட்டியிடும் அறிவியல் வளர்ச்சி, போக்குவரத்து விரைவு, உலகோர் நெருக்கம், கருத்துக்கள் பரிமாற்ற வாய்ப்பு, பத்திரிக்கைப் பெருக்கம், வானொலி தொலைக்காட்சி வளர்ச்சி, இண்டர்நெட் வசதி, ஆகியவற்றால் மக்கள் எண்ணங்களும் பெருகி, எதிலும் மனநிறைவில்லாத நிலைமையும் பிறந்து, அப்படியொரு நெருக்கடியில் உழலுமாறு நமது வாழ்க்கை அமைந்திருக்கிறது. எனவே, பழைய நிகழ்ச்சிகளை, நமது கடந்தகால வரலாற்றை அறிந்து கொள்வதிலும், ஆழமாக எண்ணிப் பார்ப்பதிலும் ஆர்வம் ஏற்படுவதில்லை. பலருக்கும் தத்தம் தாய் தந்தையர் பெயர் தெரியும்; பாட்டனார் பெயர் தெரியலாம்; முப்பாட்டனார் பெயர் நிச்சயமாகத் தெரியாது. அதற்குக் காரணம் வரலாற்றுப் பெருமை உணர்வும் இனப்பற்றும் நமக்குக் குறைவு என்பதுதான். எதனாலே குறைந்தது? வரலாற்றுப் பெருமை கொள்ளும் சூழலையும் நமது இனம் எது என்னும் கருத்தையும் நாம் இழந்துவிட்டோம். வரலாற்றுப் பெருமை மங்கிப் போன சூழ்நிலையில், அந்நிய ஆங்கிலேயர் ஆட்சியில் அடிமைப்பட்டவர்களாய், 'நாம் அடிமை' என்ற எண்ணத்தில், பல ஆண்டுகள் இருந்ததால், நமது இனம், மொழி குறித்த பல வரலாற்று உண்மைகள் வெளிப்பட்டாலுங்கூட நம்முடைய உணர்வில் நாம் ஒரு பெருமைக்குரிய சமுதாயம் என்ற நம்பிக்கை இழந்த ஒரு கூட்டமாகவே நடமாடுகிறோம். திராவிடர் இயக்கத்தைப் பற்றி இங்குப் பேசுகிறபோது, பேராசிரியர் தாண்டவன் அவர்கள் வரலாற்றுச் செய்தியை விளக்கப் பார்ப்பனர் என்ற சொல்லைப் பயன்படுத்தியபோது சமூகநீதியை உணர்ந்தவர்தான் பேராசிரியர் என்று நான் எண்ணி மகிழ்ந்தேன். ஆனால், இன்றைக்குப் 'பார்ப்பனர்' 2.தி.இ.405