உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திராவிட இயக்கம்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8


________________

8 ஏறத்தாழ 100க்கு மேற்பட்டோர் பேசும் நிலை உருவாகியுள்ளது காலத்தின் கட்டாயமும் வரவேற்க வேண்டியதுமாகும். திராவிட இயக்கத்தினுடைய தோற்றத்திலே இருந்து அது வளர்ச்சியுற்ற காலத்தில் பல்வேறு கட்டங்களில் அதனுடைய இலட்சியம், கொள்கை, வளர்ச்சி, செயல்திட்டம், ஆகியவற்றில் ஏற்பட்ட மாற்றங்கள், பிரிவுகள், ஆகியவற்றை எல்லாம் ஆராய்ந்து பேசும் கடமையாற்றப் பல்கலைக் கழகப் பேராசிரியர்கள் பலர் முன்வந்திருப்பதே பெருமையாகும். என்னுடைய நண்பர் ஈரோடு சுப்பிரமணியம் அவர்கள் தொடங்கி, இவ்வளவு பேராசிரியர்கள் ஈடுபடக்கூடிய கருத்தரங்கை உருவாக்கிய பேராசிரியர் தாண்டவனை நான் உளமாரப் பாராட்டுகிறேன். இந்த இயக்கம் எந்நிலை உற்றாலும், அந்தத் திராவிட இனஉணர்வு நமக்கு ஏற்படவேண்டும். நம்மைப் பொருத்தவரையிலாவது இன உணர்வோடு வாழ்வதில் ஓர் உறுதி கொள்ளவேண்டும் என்று நான் விரும்புகிறேன். உலகம் மிக வேகமாக மாறுகிறது. உலகத்தினுடைய சுழற்சிகூடப் பல்லாயிரம், ஆண்டுகளுக்கு முன்னர் சுழன்றதைப் போன்று ஒரே வேகத்தில் சுற்றினாலுங்கூட, தொன்மைக் காலத்தில் மனிதச் சிந்தனையினுடைய சுழற்சி வேகம் குறைவு. சங்ககாலத்தில் - திருவள்ளுவர் காலத்திலே இருந்த சிந்தனைச் சுழற்சி அதைவிட அதிகம். கடந்த நூற்றாண்டிலே இருந்ததைவிட இன்றைக்கு மாந்தர் எண்ணங்களுடைய வளர்ச்சியும், சுழற்சியும் பலமடங்கு வேகமானது. நாம் வாழும் சூழல் மாற்றம் அதைவிட அதிகம். சூழ்நிலை மாறுகிறபோது மனிதனின் எண்ணங்கள், விருப்பங்கள் எல்லாங்கூட நிலைத்து நிற்கமுடியவில்லை. வேகமாக ஓடுகிற நீரோட்டத்திலே குளிக்க இறங்கியவன்,