13
________________
13 அதனால்தான் திராவிடர்கள் இருக்கிறார்கள் என்று நான் கருதுவதால்தான். நாங்கள் சுயநிர்ணய உரிமை வேண்டுமென்கிறோம்," என்று பேசினார் அறிஞர் அண்ணா. - ஓர் அரசியல் கண்ணோட்டத்திலே தென்னாட்டுக்காகக் குரல் எழுப்புகிற முறையில் தமிழ்நாடு திராவிடநாடு, தமிழ்மொழி, பண்பாடு, நாகரிகம், திராவிட மொழிகள், கலைகள் ஆகியவைகளுக்குக் கிடைக்கவேண்டிய நியாயமான முக்கியத்துவத்தை வலியுறுத்தும் உணர்வோடு, அண்ணா அவர்கள் 'தென்னாடு அகில இந்தியாவிற்கும் வழங்குவதற்கான) ஒரு தனித்தன்மை சிறப்புடையதான கலாச்சார மேன்மை கொண்டதாக இருக்கிறது' என்று குறிப்பிட்டார்கள். ஒரு வேளை, அண்ணா அவர்கள் சொன்னது என்பதால், அந்தக் கருத்துக்கு அனைத்துத் தரப்பினரும் இசைவு தெரிவிப்பது கடினமல்லவா? - நூறு ஆண்டுகட்கு முன்னரே சுவாமி விவேகானந்தர் சொல்கிறார்: The Madras Presidency is the habitat of the Tamil race whose civilization was the most ancient and a branch of whom called the Sumerians, spread a vast civilization on the banks of the Euphrates, in very ancient times, whose astrology, religious lore, morals furnished the foundation for the Assyrian, and Babylonian civilization, and whose mythology was the source of the Christian Bible. Another branch of the Tamilians spread from the Malabar coast, and gave rise to the wonderful Egyptian civilization, and the Aryans also are indebted to this race in many respects. சென்னை மாநிலத்தை வாழ்விடமாகக் கொண்டுள்ள தமிழர்கள், மிகவும் பெற்றவர்களாதலின், தொன்மையானதொரு நாகரிகம் அவர்களில் ஒரு பிரிவினரான