14
________________
14 சுமேரியர்கள், மிகவும் பழங்காலத்திலேயே யூப்ரடீஸ் நதிக்கரையில் விரிந்ததொரு நாகரிகத்தைப் பரப்பியதால், அவர்தம் சோதிடக்கலை, மதப்பழங்கதைகள், ஒழுக்க நெறிகள் ஆகியவையே அசிரியன், பாபிலோனிய நாகரிக வளர்ச்சிக்கு அடிப்படையானதுமன்றி அவர்தம் புராணச் செய்திகளே கிறித்தவர்களின் விவிலியத்திற்கு (பைபிள்) மூலமாகவும் அமைந்தன. மேற்குக் கடற்கரையில் (மலபார்) இருந்து சென்று பரவிய மற்றொரு பிரிவான தமிழர்களே -வியக்கப்படும் எகிப்திய நாகரிக வளர்ச்சிக்கும் காரணமாயினர். ஆரியர்களும் இந்தத் தமிழ் இனத்திற்குப் பல வகையிலும் கடமைப்பட்டுள்ளனர், என்று கூறியுள்ளார் சுவாமி விவேகானந்தர். சுவாமி விவேகானந்தர் அரசியல்வாதி அல்லர். திராவிடர் இயக்கத்தைக் கண்டதால் இப்படிச் சொல்கிறவர் அல்லர். உலகத்திற்கெல்லாம் ஒரு கலாச்சாரத்தை வழங்கிய வரலாறு படைத்த ஒரு தொன்மையான இனத்தைச் சார்ந்தவர்கள் வாழுகிற நிலம் தமிழ்நாடு என்று அவர் குறிப்பிட்டார். "இந்தியாவிலேயே நல்ல பண்பாடுடைய மக்கள் வாழுகிற பகுதியாக விளங்குவது தென்னாடு!” என்று பிறிதோர் இடத்திலே சுவாமி விவேகானந்தர் குறிப்பிட்டார். ஆகவே, தென்னாட்டுக்கு ஒரு தனிச் சிறப்பு இருக்கிறது என்பதை நாம் மறந்துவிட முடியாது; மறக்கவும் கூடாது. குமரிக் கண்டம் என்பது இந்தியாவினுடைய தென் பகுதியோடு ஒட்டியிருந்த ஒரு காலம் உண்டு. அக்குமரிக் கண்டம் தொல்லூழிக் காலத்தில் கடல் கொண்டதால் மறைந்தது. அங்கே வாழ்ந்திருந்த மானிடர் உலகமெல்லாம் பரவினார்கள் என்பது ஒரு வரலாற்று உண்மை. அவர்கள் இன்றையத் தமிழர்களைப் போலப் பேசினார்களா,