உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திராவிட இயக்கம்.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பதிப்புரை தொல்பழங்கால முதல் நாகரிக வளர்ச்சி பெற்ற வரலாறு கொண்ட தென்னகத்தில், முதற் சங்க கால முதலே இலக்கிய இலக்கண நலம் வாய்ந்த முத்தமிழ் முழங்கிய தமிழர்களிடையில், மூவேந்தர் ஆண்ட மும்மண்டலமாகத் திகழ்ந்த தமிழகத்தில், மக்கள் வாழ்ந்த நிலம் ஏற்ற தொழில் பயின்ற பழக்க வழக்கம் காரணமாகப் பல்வேறு பிரிவினராக வெவ்வேறு பெயரினராக வாழ்ந்தனர் எனினும், பிறவியினால் உயர்வு தாழ்வு கருதாத சமுதாயமாகத்தான் திகழ்ந்தனர். வேளாண்மையில் ஈடுபட்டவருள் உழுவித்து வாழ்வாரும், உழுதுண்டு வாழ்வாரும் எனப் பிரிவுகள் தலைதூக்கினும், பிறவி உயர்வு தாழ்வு உணர்வுகளுக்கு அவர்கள் ஆட்பட்டிருக்கவில்லை. இடைக்காலத்தில், 2000 ஆண்டுகளுக்கு முன் கூறி, வேத தென்னகத்தில் வந்தேறிய ஆரிய இனத்தார் பெரும்பாலும் பிராமணச் சந்நியாசிகளாதலின் தமது வேதமகிமை பேசி, வேள்விப்பலன் வேந்தர்களிடத்திலே செல்வாக்குபெற்று, கட்டளைகளென்று வருணாசிரம தருமப்படியான சத்திரியர்களாக மன்னர்களைக் கற்பித்துத் தாம் அரச குருமார்களாகி, பூசுரர்களாகி, அர்ச்சகருமாகி, வருணதருமத்தைப் புகுத்தி நாட்டு மக்களை எல்லாம் சூத்திரர்களாய்ப் பட்டியலிட்டு ஆதிக்கம் பெற்றனர். பிராமண தென்னகம் சேர்ந்த ஆரியம் வடிவில் மட்டுமே வந்தது பிற வருணத்தார் வரவில்லை. இங்கு வாழ்ந்திருந்தோரை வருண வாய்பாட்டிற்கு ஆளாக்கி ஆரியர் அனைவரும்