உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திராவிட இயக்கம்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60


________________

60 ஒரு விட வைதிகர் பலர் - தங்களைக் குருவாக ஏற்க ஆதிதிராவிடரும் (சூத்திரரும்) முன்வந்தாலும், அவர்களை ஏற்றுக்கொள்ளவே மாட்டார்கள் என்பதைக் கருதும் போதே இராமானுசரின் பரந்த நோக்கத்தின் சிறப்பு தெளிவாகும். இராமானுசரின் இந்த மனித நேயச் செயல் வைணவத்துக்கு செல்வாக்கை அளித்தது. மேலும் சைவத்தை வைணவத்துக்கு ஒரு பரந்த நோக்கம் இருப்பதாக உறுதிப்படுத்துவதற்கு இந்தச்செயல் காரணமாக இருந்தது. அதே போல, கருநாடகத்திலே தோன்றிய பசவர், மக்களின் சாதி வேற்றுமையை ஒழித்து ஒன்றுபடுத்தும் முயற்சி மேற்கொண்டார். அது ஒரு வகையில் இன்றும் தொடர்கிறது, மராட்டியத்தில் தோன்றிய பாபுராவ் பூலே என்ற ஒரு சிறந்த சிந்தனையாளர், ஆரிய வைதிகக் கொள்கையை எதிர்ப்பதற்கும் சாதிபேதத்தை ஒழிப்பதற்கும் ஓர் இயக்கம் நடத்தினார். 100 ஆண்டுகட்கு முன்னர் கேரளத்தில் நாராயண குருவும், ஆந்திராவிலே கவிஞர் வேமன்னாவும், தமிழ்நாட்டிலே பெரியாருக்கு முன்னதாக, வடலூர் வள்ளலாரும் இறைப்பற்று வழியில் ஒருவகை சமரச சுத்த சன்மார்க்க இயக்கம் கண்டவர் ஆவர். அந்த முற்போக்குக் கொள்கைகளை உணர்ச்சியோடு பாடியவர் பாரதியார். பெரியார், அவர்கள் சுயமரியாதை இயக்கம் கண்டு பகுத்தறிவுக் கொள்கைகளை மக்களிடத்திலே எடுத்து வைத்து வாதாடி நிலைநாட்டுகிற அரும்பணி ஆற்றினார். திருக்கோயில்களில் சில சமூகத்தாரை நுழைய விட மறுப்பதைக் குறித்துக் கேட்டவர்களுக்கு, திரு.வி.க. தலைமை ஏற்றிருந்த விருதுநகர் மாநாட்டில் சொன்னார்: "உங்களை உள்ளே விட மறுக்கும் கோயிலுக்கு நீங்கள் செல்லாதீர்கள்; ஆண்டவன் அங்கு மட்டுமில்லை; எங்கேயும் இருக்கிறான்" என்று. தாம்