மாநில சுயாட்சி — ஏன்?
சாட்டவில்லை. சர்க்கரை ஆலை இப்போது தமிழ்நாட்டில்; அதைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் டில்லியில் என்று அதிகாரத்தைப் பிரித்துத் தந்தார்களே அவர்கள்தான் குற்றவாளிகள்.
ஆனால், மத்திய அரசின் வலிவு, அசாமிற்கு அச்சத்தைத் தர — தமிழ்நாடு தத்தளிக்க, கேரளத்திற்குக் கலக்கம் தருவதற்காகத்தான் என்றால், நமது சுதந்திரச் சிந்தனையைச் சிறுகச் சிறுக அழித்து சிந்திக்கும் திறனே இல்லாமல் ஆக்குவதற்குத் தான் என்றால்,
நமது கூட்டுச் சக்தியின் மூலம், நம்மில் ஒவ்வொருவருடைய வலுவையும் கொண்டு அந்த அக்கிரம வலிவைச் சிறுகச் சிறுகக் குறைப்பதுதான் எங்கள் கடமையாக இருக்கும்.
மத்திய அரசு பலமாக இருந்தது குப்த சாம்ராஜ்யத்தில்! மத்திய அரசு பலமாக இருந்தது மொகலாய சாம்ராஜ்யத்தில்! மத்திய அரசு பலமாக இருந்தது பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தில்! ஆனால், இன்று அந்தச் சாம்ராஜ்யங்கள் எங்கே?
சரிந்த சாம்ராஜ்யங்களுடன் — இப்போது இருக்கிற சாம்ராஜ்யத்தை ஒப்பிடுவதற்கு உள்ளபடியே வருத்தப்படுகிறேன். அந்த சாம்ராஜ்யவாதிகள் — தங்கள் சாம்ராஜ்யங்களுக்கு அதிகமான வலிவு தேட முயற்சி செய்த ஒவ்வொரு நேரத்திலும் சரிவு தான் ஏற்பட்டது என்பதைச் சரித்திரமுணர்ந்தவர்கள் அறிவார்கள்.
அவுரங்கசீப் காலத்தில் இருந்த வலிவான மத்திய ஆட்சிக்கு ஒப்பான மத்திய ஆட்சியைச் சரித்திரத்தில் காண முடியாது. ஆனால், அந்தச் சாம்ராஜ்யம் என்ன ஆயிற்று என்பதைக் கொஞ்சம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
நமக்கிருக்கிற கவலை எல்லாம் — தூக்க முடியாத பாரத்தை மத்திய ஆட்சியினர் விரும்புகிறார்களே என்பதுதான். மத்திய அரசின் வலிவு என்பது மாநிலங்கள் ஒவ்வொன்றின் தனித்தனி வலிவையும் கூட்டியதால் ஏற்பட்ட மொத்த வலிவுதான் என்றால் வாதத்திற்கு ஏற்றது; அரசியலுக்கு
22