உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திராவிட தேசீயம் மாநில சுயாட்சி ஏன்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அறிஞர் அண்ணா

நல்லது; காரியத்திற்கும் உகந்தது. ஆனால், மத்திய அரசுதான் எல்லா உரிமைகளையும், பலத்தையும் வைத்திருக்கும்; மாநிலங்கள் தத்தித் தத்தி நடக்கும் அதிகாரம் தான் வைத்திருக்கும் என்றால், அது எதற்கும் பொருத்தமுடையதல்ல.

மாநில அதிகாரங்களை எல்லாம் எடுத்து மத்திய அரசு குவித்து வைத்துக் கொள்வதால், மாநிலங்கள் பலவீனமடையும் என்பது மட்டுமல்ல, மத்திய அரசுக்கென்று புதிய வலிவு ஏதும் ஏற்பட்டுவிடாது.

நாட்டுப் பாதுகாப்புத் தவிர மற்ற அதிகாரங்கள் அனைத்தையும் பற்றிச் சிந்திப்போம். மாநிலங்களுக்குத் தேவையான அதிகாரங்களை மாநிலங்கள் எடுத்துக் கொள்ளட்டும். பின்னர் மாநிலங்கள் விரும்பித் தருகின்ற மீதியுள்ள அதிகாரங்களை மத்திய அரசு எடுத்துக் கொள்ளட்டும்.

தற்போதுள்ள அரசமைப்புச் சட்டத்தை ஆராய்ந்து மாநில — மத்திய அரசுகளுக்குள்ள அதிகாரப் பங்கீடுகளை மாற்றி அதிக அதிகாரங்களை மாநிலங்களுக்குத் தர வேண்டும். அதற்கான ஒரு குழு நியமித்து ஆராயவேண்டுமென்று நிருவாகச் சீர்திருத்தக் குழுவிடம் நான் யோசனை தெரிவித்துள்ளேன்.

இன்றைய தினம் மாநில அரசுக்குள்ள வேலை என்ன? மக்களுக்குச் சோறுபோடுவது — வேலை வாய்ப்புத் தருவது — தொழில் நீதியை நிலைநாட்டுவது — சுகாதாரத்தைப் பேணுவது — கல்விச் செல்வத்தை வளர்ப்பது போன்ற எண்ணற்ற வேலைகளைச் செய்ய வேண்டியது மாநில அரசு.

பலமான மத்திய அரசு வேண்டும் என்று கூறுகிறார்கள். மத்திய அரசுக்குப் பலம் எதற்காக? அந்தப் பலம் யாருக்கு எதிராக? என்பதையும் நாம் சிந்தித்துப் பார்த்திட வேண்டும்.

பலம் என்பது தனிப்பட்ட ஆளுக்கு இருக்கலாம்; தனிப்பட்ட அமைப்புக்கு இருக்கலாம்; மாநிலத் துரைத்தனத்துக்கு இருக்கலாம்; மத்தியத் துரைத்தனத்துக்கு இருக்கலாம். ஆனால், அந்தப் பலம் யாருக்காக —

23