உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திராவிட தேசீயம் மாநில சுயாட்சி ஏன்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மாநில சுயாட்சி — ஏன்?

எதற்காகப் பயன்படுத்துவது என்பது பற்றி விளங்கிக் கொள்ளாமலும் விளக்கிச் சொல்லாமலும் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

சீனாவின் ஆக்கிரமிப்புக்கு எதிராக மத்திய அரசுக்கு வலிவு தேவை என்றால், நிச்சயம் அந்த வலிவைத் தேடித்தரத் தயார்.

இப்படி கள்ளக்குறிச்சி சர்க்கரை ஆலையில் இருந்து, காட்பாடி சிறு தொழிற்சாலை வரை எல்லாவிதமான சிறு விஷயங்களிலும் மத்திய அரசே அதிகாரத்தை வைத்துக் கொண்டிருப்பதன் விளைவு, பெரிய விஷயங்களில் அதிகக் கவனம் செலுத்த முடியாமல் போய்விடும் என்பதால்தான், அதிகாரங்கள் டில்லியில் குவிக்கப்படக்கூடாது என்கிறோம்.

ஆகவே, வலிவான மத்திய அரசு தான் பிரச்சினைகளைத் தீர்க்க முடியும் என்பது தவறு. மாநில சுயாட்சி தர தயக்கம் காட்டுவார்களேயானால், அளவுக்கு மீறிய அதிகாரங்களைத் தாங்கித் தாங்கிப் பாதுகாப்புப் போன்ற பெரிய விஷயங்களில் சோடை போய் விடுவார்களோ என்பதுதான் எங்கள் சந்தேகம்.

மேல் அதிகாரம் அனைத்தும் டில்லியில் இருப்பதை மாற்றிடத்தான், மாநில சுயாட்சித் தத்துவம் பிறந்துள்ளது.

(தமிழ்நாடு முதலமைச்சராக இருந்த அறிஞர் அண்ணா அவர்கள் 28.7.1968 அன்று சென்னையில் ஆற்றிய உரை இது)

❖❖❖❖❖

24