பக்கம்:திருஅல்லிக்கேணி மஹாத்மியம்.pdf/3

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஓம் கேஶவாய நம:
ஸ்ரீ பேயாழ்வார் திருவடிகளே ஶரணம்

ப்ருந்தாவன க்ஷேத்திரமென்னும்

மயிலை திரு அல்லிக்கேணி மஹாத்மியம்

விற்பெருவிழவும் கஞ்சனும் மல்லும்
        வேழமும் பாகனும்வீழ
செற்றவன் தன்னை புரமெரிசெய்த
        சிவனுறு துயர்களை தேவை
பற்றலர் வீயக் கோல்கையில் கொண்டு
        பார்த்தன் தன்தேர்முன் நின்றானை
சிற்றவை பணியால் முடிதுறந்தானைத்
        திருவல்லிக் கேணிக் கண்டேனே.

கதாரம்பம்

ஸ்ரீ ஸதாஶிவ மூர்த்தியானவர் ஸ்ரீ கைலாசத்தில் சிவகணங்களும், சித்தகணங்களும், தேவகணங்களும், ரிஷிகணங்களும் புடை சூழ, ரத்னஸிம்ஹாஸநத்தில் கொலு வீற்றிருக்கின்ற சமயத்தில் நாரதபகவானானவர் உமாமஹேசரைப்பார்த்து, ஸ்வாமீ! நீர் சொல்லிக்கொண்டு வந்த பரப்பிரம்ஹ மூர்த்தியான ஸ்ரீமந் நாராயணன் வாசஞ் செய்யும் திவ்யதேச மஹாத்மியங்களைக் கேட்டு மிகவும் ஆனந்தத்தை யடைந்தேன்.

ஆயினும், நான் ருஷிசிரேஷ்டர்கள் நித்ய வாசஞ் செய்யும் நைமிஶாரண்யத்தைக் கிட்டியபோது, அங்கு ஸப்த ருஷிகளையும் மற்றுமுள்ள ருஷிகளையுங் கண்டேன். அவர்கள் மத்தியில் ஸனத் குமாரர் அஷ்டவசுக்களின் நடுவேயிருக்கும் இந்திரனைப்போல் வீற்றிருந்து மற்ற ருஷிகள் சொல்லும் பகவத்குணபவங்களைக்