பக்கம்:திருஅல்லிக்கேணி மஹாத்மியம்.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

4

திருவல்லிக்கேணி மஹாத்மியம்

கேட்டுக் கொண்டிருக்கும் போது சௌனகர் அந்த ஸனத்குமாரரைப்பார்த்து ஸ்வாமீ! முன்னம் ஜம்பூ த்வீபத்தில் கௌமோதகீதாரியான புராண புருஷனுக்கு நித்திய வாஸஸ்தானங்களான ஸ்ரீரங்கம், வேங்கடாத்ரி, ஹஸ்திஶைலம் முதலான நூற்றெட்டுத் திவ்ய தேசங்களென்று சொல்லி இருக்கின்றீரே; அந்த திவ்ய தேசங்களின் வைபவங்களைக் கிரமமாகச் சொல்லவேண்டுமென்று கேட்க; அப்போது ஸனத்குமாரர் சௌனகரைப்பார்த்துக் கிரமமாகச் சொல்லிக்கொண்டு வருகையில் நூற்றெட்டுத் திவ்ய தேசங்களுக்குள் மிகச்சிறப்புற்றோங்கிய திவ்யதேசம் மயிலை ப்ருந்தாவன க்ஷேத்திரமென்றும் அது ஸ்ரீமந்நாராயணனுக்கு வாசஸ்தானமென்றும் ஐஹிக ஆமூஷ்மிக ஸகல புருஷார்த்தங்களையும் கொடுக்கத்தக்க தென்றும், அந்த பருந்தா வனத்திலே விஷ்ணுவிற்கு ஐந்துவிதமான திவ்யமங்கள் விக்ரஹஸ்வரூபங்களு ண்டாயிருக்கின்ற தென்றுஞ் சொல்லக்கேட்டு அந்தப் பிருந்தாவன வைபவங்களை தேவநீடத்தில் ஸவிஸ்தாரமாகத் தெரிந்து கொள்ளலாமென்று வந்தேனென்று சொன்ன நாரதமுனிவரைப் பார்த்து சிவபிரான் சொல்லுகின்றார்.

வாநீர் நாரதரே! ப்ருந்தாரண்யத்தின் மஹாத்மியத்தையும், அங் கெழுந்தருளி யிருக்கும் ஐந்துவிதமான விஷ்ணு மூர்த்தியின் பெருமையையும், தீர்த்த மஹிமையையும், பிரம்ஹாதி தேவர்கள் ருஷிகள் முதலிய யாவராலுஞ் சொல்லமுடியாதாயினும் பக்தியுடன் கேட்ட வுமக்கு நானறிந்த மாத்திரஞ் சொல்லுகின்றேன்,கேளும் என்று சொல்லத் தொடங்கினார்.

மயிலையின் சிறப்பு.

பூர்வம் நீரறிந்த, நித்யசூரிகளாலும், பிரம்ஹாதி தேவர்கள் ருஷிகள் முதலானவர்களாலும், ஆராதித்துக்கொண்டு வரும்படியான, பூலோகத்திலுள்ள திருநீர்மலைஎன்னுந் திவ்யதேசத்திற்கு வடகிழக்கான ஈசான்ய திக்கிலே ஓர் ஐப்பசிமாஸம் ஸதயநக்ஷத்ரத்தில் நீர் நிறைந்த ஓர் ஓடையில் செவ்வல்லிப்பூ வொன்றில் திருவவதரித்து, ஓடித்திரியும் யோகிகளான தத்துவதரிசிகளிற் சிறந்தவராய் அனாதியான கேசவனுக்கு அந்தரங்கரான மஹதாஹ்வயர் அவதாரத்திற்கு ஸ்தானமாகியும், நவரத்னகசித