பக்கம்:திருஅல்லிக்கேணி மஹாத்மியம்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவல்லிக்கேணி மஹாத்மியம் மிராநின்ற மாடமாளிகைகளாலே அலங்கிருதமாகியு மயூரநகரியை மூன்றுலோகங்களிலும் ப்ரசித்தமான வ்ருஷபுனென் னும், ராஜசிரேஷ்டன் பிரம்ஹாவைத் தபசினாலே சந்தோஷிப் பித்து விசுவகர்மாவைக் கொண்டு ஸ்ருஷ்டிப்பித்தான். அந்த பட்டணத்தில் ஷண்முகன், சூத்ரஜன்மாவான மந்தாரகனென் ஒரு ருஷிக்குப் பிரசன்னனாகி அவர் வேண்டும். வரங்க ளைக்கொடுத்து வாத்ஸல்யத்தாலே ஸ்வர்க்கத்தைப் பார்க்கிலும் மிகவுகந்து வாசத்திற்கு யோக்கியமாய் எப்போதும் க்ரீடத்துக் கொண்டிருக்கிறான். திவ்யகந்த தீவ்யாஸ திவ்யபுஷ்ப திவ்ய பலங்களைடைய ஸாலம், தாலம், தமாலம், ஹிந்தாலம், சம்பகம்,நாரிகேளம், புந்நாகம்,சூதம், சிந்துவாரம், கந்தபூரம்,பீஜபூரம், தவம், அசோ கம், பாடலம், வகுளம்,வஞ்சுளம் முதலான வ்ருக்ஷங்களையும், ஸாரஸம், சக்ரவாகம், காரண்டம் முதலான ஜலபக்ஷிகளாலும், விகவிதங்களாய்த் தாதுகளையுடைத்தான தாமரை செங்குவளை முதலான புஷ்பங்களாலும், நிறைந்து தெளிந்து குளிர்ந்த நீரை யுடைய ஓடைகளையு முடைத்தாய் மாயை என்றும், மாதவி என்றும், மயூரநகரீ என்றும், வைஷ்ணவீ என்றும் மஹரிஷிக ளாலே சொல்லப்பட்டதாய்; மயூரநகரீ என்று மூன்றுலோகத்தி லும் ப்ரஸித்தமாய் விளங்கிக் கொண்டிருக்கிறது. மான னும் . அந்த பட்டணத்திற்கு சமீபத்தில் நூறுவிற்கடை தூரத் திற்கு வடக்கே செம்பவள வெண்முத்தம் வெண்திரைகள் வந்து தைக்கும் கடற்கரையோரமாய் அதிமனோ ஹரமான ப்ருந்தாவன மென்றொருவன மிருக்கின்றது. பிருந்தாவனத்தின் சிறப்பு. 5 r L அதில் துளஸீவனம் மிகச்செழிப்பாய், நானா விருக்ஷங்களா லும், தெளிந்த தீர்த்தங்களாலும் சோபித்து அனேக ருஷிகளாலே சேவித மாயிருக்கின்றது. அதில் ஸ்ரீமந்நாராயணன் தன் திரு மேனியை ஐந்துவிதமாகச் செய்துகொண்டு நித்பவாசஞ்செய்கின் . றான். அந்த மூர்த்திகளை சகலமான சேதனர்களும்சேவித்து ஸர்வா பீஷ்டங்களைப் பெறுகிறார்கள். அங்கு முஹூர்த்தகாலம் வசிக்கு மவர்கள் வாஜபேய எக்ப்பலத்தை யடைகின்றார்கள். ஸ்வபணத்