பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 1.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. வான் சிறப்பு 101 19. பண்டுபலர் நோன்பிழந்தார் பாண்டியனும் பாவலரை க் கொண்டிலனேன் விட்டான் குமரேசா-கொண்டதொரு தானம் தவமிரண்டும் தங்கா வியனுலகம் வானம் வழங்கா தெனின். (க) இ-ள். குமரேசா ! முன்பு பலர் தவத்தை இழந்து களர்ந்தார்; பாண்டியனும்தானம் புரியமுடியாமல் என்.அயர்க்கான்? எனின், வானம் வழங்காது எனின் தானம் தவம் இரண்டும் கங்கா என்க. வழங்குதல்=நீரை வாரி நேரே பொழிதல். மழை இல்லையானல் விழவும் பூசையும் நடவா என்று முன் னம் குறித்தார்; இதில் கானமும் தவமும் இலவாம் என்கின்ருர். மனிதனுடைய வாழ்வு புனிதம் அடைந்து உயர்வது இனிய செயல்களால்; அந்த இனிமைகளுள் பிறர் இன்புற உதவி புரி வது முதன்மையாய் நின்றது; அங் நிலைமை தலைமையா இங்கு அறியவந்தது. கருமம் மருவிவரும் அளவு வாழ்வு பெருமையுறும். கான் முயன்று ஈட்டிய பொருளைக் ககுதியானவர்க்கு ஒரு வன் உவந்த தருவது தானம் என வந்தது. எல்லா உயிர்களுக் கும் இரங்கி ஈவது ஈகையாம். அது பொருள் வலியால் பொலிந்து வருவது; இது அருள் வழியில் விளைங்க அறம் பெருகுவது. கானம் தனத்தால் செய்வது; தவம் மனக்கால் அமைவது. இல்லறம் துறவறம் என்னும் இருவகை நெறிகளில் முறையே இவை உரிமையாய் உயர்ந்து ஒளிபுரிந்து வருகின்றன. வானம் மழை பெய்யா காயின் கானமும் கவமும் ஆகிய அரிய இருகருமங்களும் பெரிய இவ்வுலகில் நிலையா என்பதாம். கருமங்கள் தங்கா எனவே தங்குவன தெரிய வந்தன. இங்கே புண்ணியங்கள் பொலிந்து வரவேண்டின் விண் னிலிருந்து மழை பொழிந்து வரவேண்டும். பொழியாது எனின் என்று மொழியாமல் வழங்குகலைக் குறித்தது வானம் உரிமை யோடு வழக்கமாப் பெய்துவரும் வளமை தெரிய வந்தது. மழை இல்லையேல் நெல் புல் முதலிய விளைவுகள் இவ்வுல கில் இலவாம்; ஆகவே பொருள் வளங்கள் யாவும் குறைந்து போம்; போகவே கருமதானங்களும் மறைக்க போம். ஆக்கக்