பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 1.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110 திருக்குறட் குமரேச வெண்பா "திேதாரைப் போற்றுது உம் த்ேதாரைப் போற்று அாஉம் நேத்திரம் என்ன உலகை நெறிறீேஇ மூத்த அறிவில்ை நூற்பொருள் முற்காட்டி ஆத்தனையும் காட்டிவிட லான்." (இன்னிசை) நீத்தாருடைய சீர்மை சீர்மைகளை இது காட்டியுளது. காட்சி களைக் கருதிக்கண்டு இவருடைய மாட்சிகளை உணர்ந்த கொள்ள வேண்டும். வானம் போல் ஞானயோகிகள் வையம் உப்ய வழி செய்கின்ருர். பொப்யான புலைஒழியமெய்யானநிலை.அருள்கிரு.ர். மழையின்றி மாநிலத்தார்க் கில்லே, மழையும் தவமிலார் இல்வழி இல்லை. (நான் மணி) நல்லார்க்குப் பெய்யும்மழை எல்லார்க்கும் இதமாம் என்பது பழமொழி வழக்காய்க் கிழமை கழுவி வந்துள்ளது. மழைக்கும் மனநலம் உடைய விழுமிய முனிவர்க்கும் உள்ள உறவுரிமைகளை இவை இனிது விளக்கியுள்ளன. வான மழைபோல் ஞான முனிவர் வையம் உப்யச் செய்து வருதலால் அவரது விழுமிய நீர்மையை நால்கள் விழைந்து கூற கேர்த்தன. ஒழுக்க நெறி கின்று பற்றுக்களைத் துறந்தவாது பெருமையை நூல்கள் மிகவும் மேன்மையாக விரும்பி துவலும் என்பதாம். லேம் இன்றித் துறவியராய்க் கோலம் கொள்வாரும் உளர் ஆதலால் அந்த இழுக்கு உடையாரை விலக்குகற்கு ஒழுக்கத்து நீத்தார் என்ருர். நீதிநெறியே ஒழுகி வருதலால் உள்ளம் தாய்மை ஆகிறது. அங்கச் சிக்க சுத்தியால் தத் துவ ஞானம் உதயமாம்; ஆகவே மிக்கையால் நேர்ந்த பற்றுக்கள் யாவும் அற்று முற்றும் துறக்க .ே ரு ம் ஆதலால் ஒழுக்கம் துறவுக்கு அடையாப் அமைந்தது. உண்மைத் துறவியின் உறவுரிமை உணர வந்தது. நூல் என்பது உயர்ந்த மேதைகளால் செய்யப் பெறுவது; மனித குலத்துக்குப்புனித போதனைகள் புரிவது; சிறக்க பொருள் களைத் தழுவி வரும் அளவு அது சிறப்புற்று விளங்கும்; துறக் தவர் மிகவும் சிறந்தவர் ஆகலால் அவருடைய மகிமைகளை அது விழுமிதா விழைந்து புகழும்; அந்த உரிமை இங்கு உணர்ந்து கொள்ள வந்தது. பனுவல் விழைவது பரம சீர்மையாம். விழுப்பம் = சிறப்பு. பனுவல் = நூல். சிறந்த புலமை யால் ஆய்ந்து தெளிந்து செய்வது என்னும் குறிப்பினையுடையது.