பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 1.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. நீத்தார் பெருமை 151. மறுகி அழுவதைக் கண்டு இவர் உள்ளம் உருகினர். அவன், அருகே சென்று கின்று கலா தெய்வத்தைச் சிங்தித்த மந்திர மொழியாக ஒரு வெண்பாவை அன்போடு இவர் கூறினர். ஆழியான் பள்ளி அனேயே! அவன்கடைந்த வழி வரையின் மணிக்காம்பே!-பூழியான் பூனே! புரம் எரித்த பொற்கிலேயில் பூட்டுகின்ற கானே! அகல நட. (கம்பர்) இங்கனம் கூறவே விடம் நீங்கியது. இறந்து கிடந்த அவன் விரைந்து எழுந்தான். இவரது தெய்வப் புலமையையும் நிலைமை யையும் அறிக் து நாடு முழுவதும் இவரை ப் புகழ்ந்து போற்றி யது. நிறைமொழியாளர் மகிமையை மறைமொழி தெளிவா உணர்த்திவிடும் என்பதை உலகம் காண இவர் விளக்கி நின்ருர். ஆன்ருேர் மகிமையை அன்னவர்தம் வாய்மொழியே சான்ரு உணர்த்தும் தனித்து பெரியார் பெருமையை அவர் மொழியால் அறியலாம். = 29. வென்றிக் கபிலர் வெகுளியால் ஏன்சகரர் குன்றி மடிந்தார் குமரேசா-என்றும் குணமென்னும் குன்றேறி கின்ருர் வெகுளி கணமேயும் காத்தல் அரிது. (கூ) இ-ள் குமரேசா ! கபிலமுனிவர் வெகுளியால் சகர ர் எல்லாரும் ஒருங்கே ஏன் உடனே இறந்தார்? எனின், குனம் என்னும் குன்று எறிகின்ருர் வெகுளி கனம் ஏயும் காத்தல் அரிது என்க. குணம் என்றது அரிய இனிய நீர்மைகளை. மலர்க்கு மனம் போல் உயிர்க்குக் குணம் உயர் கலங்களை அருளுகிறது. அடக் கம் அமைதி அருள் வாப்மை தாப்மை முதலிய மேலான பண் புகள் மருவிய பொழுது அங்கே அதிசய மகிமைகள் பெருகி வருகின்றன. இனிய இயல்புகள் வளர உயர்வுகள் விளைகின்றன. ( குன்று=மலே குவிக்க உயர்ந்து நிமிர்ந்து நிற்பது என்னும் குறிப்பின. . உலகத்தில் உள்ள குன்றுகள் கல் மண்களால் நிறைந்த கிற்கின்றன; அவற்றினும் வேறுபாடு தெரியக் குணம் என்னும் குன்று என்ருர் உருவக அணி ஒளி மிகுந்துள்ளது.