பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 1.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152. திருக்குறட் குமரேச வெண்பா ஏறி நின்ருர் என்றது அந்த ஏற்றத்தின் அருமையும், எறு கின்ற தோற்றமும், எறியபின் விருேடு அங்கு விளங்கி கிற்கும் கிலைமையும் தலைமையும் வியந்து காண வந்தது. திண்மையும் பெருமையும் தெரியக்காட்டி வண்மையும் வன்மையும் துலக்கி உண்மையான உயர்ச்சியை உருவகம் உணர்த்தியுள்ளது. வெகுளி = கோபம். சிங்தை நொந்து வெந்து வரும் வேகத் தை இது விளக்கி நின்றது. வேகின்ற சிங்தையால் வெளியே வேகித்து வருவது வெகுளி என வந்தது. கணம் என்றது மிகவும் சிறிய கால அளவைக் காட்டி கின் றது. கிமிட நேரம், கொடிப் பொழுது என்பன போல் இது ஈண்டு வந்துளது. ஏகாரம்ஏப்க்க உம்மைவேகம் தெரியகின்றது. குணங்கள் ஆகிய மலைமேல் எறிகிற்கும் மகான்களுடைய கோபத்தை யாரும் யாதும் தடுக்க முடியாது என்பதாம். மாதவர் வாய்மொழி எவரையும் அழிக்கவும் ஆக்கவும் வல் லது என்பதை முன்பு அறிக்கோம்; அவர் எண்ணிலுைம் பார்க் தாலும் அவை நிகழ்ந்து விடும் என்பதை ஈண்டு உணர்ந்து கொள்கிருேம். அவரது அம்புத நிலையை அறிவுறுத்தியருளினர். அதிகார ஆற்றல்கள் நிறைந்தள்ள அரசர்கள் சீறி வெகுண் டாலும் அந்த வெகுளியை நேரே கடுக்கலாம், அல்லது கப்பிப் பிழைக்கலாம்; முனிவர் முனிவு எவரையும் விரைந்து நீறு செப்து விடும் ஆதலால் காத்தல் அரிது என்ருர் குணம் இல்லார் வெகுளி யினும் குணம் உடையாரது வெகுளிக்கே யாரும் அஞ்சவேண் டும்; இல்லார் வெகுளி பாதும் செய்யாத, உடையார் வெகுளி எல்லா அழிவுகளையும் ஒல்லையில் ஆற்றும் ஆகலால் அகன் ஆம் றல் எல்லை யில்லாததாம். அவர் உள்ளம் கோக ஒழுகலாகாது. கோபம் தீய குற்றம்; அது தாப குணங்களையுடையாரிடம் எளிகே கோன்ருத, தோன்ற கேரின் அதற்கு மூலகாரணம் வேறே யிருக்கும்; அதனை விளைத்தவரை அழித்த ஒழித்து விரைந்து அது ஒழிந்து போம் என்பது தெளிந்து கொளவந்தது. கடல் நீரிலிருந்து தோன்றுகின்ற கனல் வடவைத் தீயாம்; அதுபோல் குண மலையிலிருந்து எழுகின்ற கோபமும் ஊழித்தி போல் உருத்து உக்கிர வேகமாய் எரித்து அழிக்கும் என்க.