பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 1.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. அறன் வலி யுறுத்தல் 171 விரைசும் பல்லியம்-வில்லா வத்தொடும் திரைசெய் வேலைக்குஓர் ஆகுலம் செய்ததே. (இராமா, முதல்போர், 55) பல்வேறு வகையாகக் கலித்து எழுகின்ற பேரொலிகளை ஆகுலம் என்னும் பேரால் இவை குறித்திருக்கின்றன. பெரிய இடம்பமாய் வெளியே பலரும் தெரியுமாறு நெடிய ஆடம்பரங்களோடு தம் பேரைக் கலக்கி ஆரவாரமாச் செய்கிற கருமங்களை ஆகுலரே என்று சாதுரிய சாகசமா ஈண்டு ஒதுக்கி யிருப்பது ஊன்றி உணர்ந்து ஒர்ந்த சிக்திக்கக் தக்கது. அகத்தில் சுத்தம் இல்லாதவன் புறத்தில் எவ்வளவு கருமங் களைச் செப்தாலும் அவற்ருல் அவன் உயர்ந்தநிலைகளே அடைந்து கொள்ளமுடியாது; உள்ளம் சுத்தமாயிருந்தால் அவை நல்ல பலன்களை நல்கி எவ்வழியும் இன்பம் சுரத்து அருளும். . பொருளுடைமையால் அறத்தை ஆக்க நேர்ந்தவன் முதலில் தனது அகத்தைத் தாய்மை ஆக்கிக் கொள்ள வேண்டும்; அக்க ஆக்கமே அவனுக்கு யாண்டும் மேலான அதிசய பாக்கியமாம். கையில் க சு இல்லாதிருந்தாலும் மனம் மாசு இலன யிருந்தால் அவன் மகானப் மகிமை பெறுகின்ருன். மாசுபடி யாக ஆடியில் உருவங்கள் தெளிவாக் தோன்றல் போல் மாசு இல்லாத மனத்தில் ஈசன் ஒளி நேரே வீசுகிறது; விசவே அவன் கேசு மிகுந்த திவ்விய நிலையில் சிறந்து திகழ்கின்ருன். தன் மனதைப் புனிதமா வைத்துக் கொள்ளுகிறவன் புண்ணியவான் ஆகின்ருன்; அவ்வுண்மை இங்கே நுண்மையா வுணர வந்தது. உள்ளம் தாய்மையானல் சொல்லும் செயலும் தாயனவாம்; ஆகவே அவன் பரம பரிசுக்கனப் ஒளி மிகப் பெறுகிருன். சித்த சக்தி தெய்வீக சக்தியாகிறது. புனித மனம் உடையவனிடம் அரிய பல கருமங்கள் பெருகி வரும்; அவன் பெரிய கருமவானப்ப் பேரின்பம் பெறுவன் என்பது கருத்து. இவ்வுண்மை சாக்கியர்பால் தெரிய வங்தது. சரி தம். சாக்கியர் என்பவர் சோழநாட்டிலே சங்கமங்கை என்னும் ஊரிலே வேளாளர் குலத்திலே பிறந்தவர். கல்வியறிவில் சிறந்த