பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 1.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

224 திருக்குறட் குமரேச வெண்பா தவங்கள் புரிக் து வருக்தி அடையும் பேற்றினை இல்வாழ்வில் இருந்து கொண்டே எளிதே அடைந்து ஒளிமிகுந்து இவன் உயர்ந்து விளங்கினன். முக்திபெற முயல்வார் எவரினும் இயல் போடு இல்வாழ்பவன் உயர்வான தலைமையாளன் என்பதை உலகம் இவன்பால் பலவகையிலும் உணர்ந்து தெளிந்தது. தீதவங்கள் எண்ணுமல் செம்மையா இல்வாழின் மாதவங்கள் வேண்டா மறுத்து. இயல்புடன் இல்வாழ்பவன் உயர்வாப் ஒளி பெறுகிருன். 48. கொற்றத் தவம்செய்யும் கோசிகரேன் வேள்விமுற்றக் கொற்றவனில் வந்தார் குமரேசா-மற்றவரை ஆற்றின் ஒழுக்கி அறன் இழுக்கா இல்வாழ்க்கை கோற்பாரின் கோன்மை யுடைத்து. (அ) இ-ள். குமரேசா அரிய பெரிய தவத்தைச் செய்யும் விசுவாமித் திரரும் உரிய வேள்வியை முடிப்பதற்காகத் தசரதன் இல்லை கோக்கி என் வந்தார்? எனின், ஆற்றின் ஒழுக்கி அறன் இழுக் கா இல்வாழ்க்கை சோற்பாரின் கோன்மை உடைத்து என்க. தசரதனக் கொற்றவன் என்றது பகை அடங்கவென்று அருக்திறலாண்மையுடன் பெருக்ககவா அவன் விளங்கியிருக்க மை கருதி. வெற்றி வேக்கனது வியனிலே கயனத் தெரிய வந்தது. நெறியே இல்வாழ்பவன் அரிய கவசிகனினும் பெரியன் என முன்னம் கூறினர்; இதில் அந்த வாழ்க்கையின் பெருமை யை உரைக்கிரு.ர். மனேயின் வாழ்வு மாதவத்திலும் மகிமையது. ஆற்றின் ஒழுக்கி= துறவிகளை செறியே ஒழுகச்செப்து. தமக்கு உரிய கரும கிலைகளில் ஒழுங்கா ஒழுகி வரும்படி உணவு முதலியன உதவிப் பிறரை ஊக்கி வருவது இல்லறத்தான் கடமை ஆதலால் அதனை ஈண்டு முதன்மையாக் குறித்தார். தனக்கு நியமமான தரும நீதிகளில் பாதும் வழுவாமல் ஒழுக வேண்டியது இல்வாழ்வான் இயல்பு; அந்த இயற்கை உரிமையைத் தெளிவா விளக்க அறன் இழுக்கா என்ருர்.