பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 1.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5 இல் வாழ்க்கை 225 ஆற்றின் ஒழுக்கலும் அமன் இழுக்காமையும் தரமா உடையவனே இல்வாழ்க்கையை உரமாச் செய்து வரமான மேன்மைகளை வளமா அடைய நேர்கின் முன், அந்த நீர்மை சீர்மைகள் இங்கே கூர்மையா ஒர்ந்து உணர வந்தன. கோற்பார்=தவம் புரிவார். அரிய விரத ஒழுக்கங்களை மருவிப் பொறி புலன்களே அடக்கி நெறியே நிற்பவர் நோற்பார் என சேர்ந்தார். இன் உருபு எல்லைப் பொருளைக் குறித்து கின் |றது. இல் வாழ்வின் மேன்மை தெளிய நோன்மை வந்தது. சோன்மை=பெருமை, பொறுமை, வலிமை, தவம். இந்த நான்கும் பாங்கோடு பொருந்த நேர்ந்தன. பொருத்தி சோக்கிப் பொருள் நிலைகளைத் திருத்தமாக் குறித்துக்கொள்ளுக. உரிய அறவோாை முறையே ஒழுக்கித் தானும் நெறி வழு வாமல் ஒழுகி வருபவனது இல்வாழ்க்கை அரிய தவசிகள் கிலை யினும் வலிமையும் பெருமையும்பொறுமையும் உடையது என்க. துறவிகள் உலகத் தொடர்பு கள் யாதும் இல்லாதவர்; தனி வாழ்வினர்:தமக்கு சேரும் பசியை மாத்திரம்நீக்கும்நோக்கினர். இல்லற வாசிகள் எல்லாத் தொடர்பும் உடையவர்; பல ரோடும் படிந்த வாழ்வினர்; அறவோர் துறவோர் வறியோர் முதலிய எல்லாருடைய பசிகளை நீக்கி எவ்வழியும் யாரையும் ஆதரித்துப் பாதுகாக்கும் கிலேயினர்; ஆகலால்நோற்பார் கிலையி உம் இவருடைய வாழ்க்கை மிகவும் பொறுப்புடையதாயது. அறநெறி கழுவி நல்ல நீர்மையோடு ஒழுகி வருபவனது மனைவாழ்வு கவவாழ்வினும் நோன்மை கோப்த்து பான்மை வாய்ந்துள்ளது. ஆகவே அது மேன்மையா வியந்து புகழவந்தது. வினேகாத்து வந்த விருந்தோம்பி கின்ருன் மனே வாழ்க்கை நன்று தவத்தின்-புனேகோதை மெல்லியல் நல்லாளும் நல்லள் விருந்தோம்பிச் சொல் எதிர் சொல்லாள் எனில். (அறநெறிச்சாரம், 89) இல்வாழ்வான் இயல்பையும் இல்லாள் கிலையையும் விளக்கி யிருக்கும் இது மனைவாழ்க்கை தவத்தின் நன்று என சவின்றது. அரிய தவத்கரை நெறியே ஒழுக உதவித் தானும் ரீதியாப் 29