பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 1.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

234 திருக்குறட் குமரேச வெண்பா உத்தமியை மணந்து இவர் இல்வாழ்க்கை புரிந்தார். இவரது மனைவாழ்க்கை எளிமையும் இனிமையும் உடையது; விழுமிய கிலேயது; புனிதமும் புலமையும் பொருக்தி, அருமையும் பெரு மையும் அமைந்து, மானமும் ஞானமும் மருவி, தானமும் தவ மும் கணிக்க, மதிப்பும் மாண்பும் கிறைந்து, அற கலங்கள் சுரந்து, புகழ் மணம் கமழ்த்து எவ்வழியும் செவ்வையாப்ப் பொலிக்க விளங்கியது. சிறந்த துறவிகளும் இவரது இல்வாழ்க் கை நிலையை வியந்து புகழ்ந்துள்ளனர். சீலமும் செம்மையும் சிறிதும் வழுவாமல் ஞாலம் உய்ய நலம் பல புரிந்து இவர் வாழ்ந்து வருங்கால் இனிய தணைவியாயிருந்த மனைவி காலம் ஆயினுள். வாழ்வின் ஒளி போயதே என்று அப்பொழுது இவர் மறுகி உருகினர். பரிதாபமாப்ப் பரிந்து வருக்தி உள்ளம் உருகிய போது உருவாகி வந்த ஒரு கவி அயலே வருகிறது. "அடிசிற் கினியாளே! அன்புடை யாளே! படிசொற் கடவாத பாவாய்!--அடிவருடிப் பின்து.ாங்கி முன் எழுந்த பேதையே! போதியோ என்துரங்கும் என்கண் இரா?" (வள்ளுவர்) தன் அருமைத் துணைவி மேல் இவர் கொண்டுள்ள உழு வலன்பும், அக்க அம்மையாரது விழுமிய குண கலங்களும் இதல்ை இனிது உணரலாம். புனிதவதியான இனிய மனைவி யுடன் இணைந்து நெறியே வாழ்ந்து வந்துள்ளமையால் இவரது இல்லற வாழ்வு எல்லாராலும் உவந்து புகழ ஒளி வீசி கின்றது. "இல்லறத்துறு ஞானிகட்கு இறைஎன இகபரத்தினர் யாரும் சொல்ல வாழ்ந்த வள்ளுவர்.' (புவவர் புராணம்) இவ்வாறு எல்லாரும் புகழ்ந்து போற்ற இவர் வாழ்க் து வந்துள்ளனர். திவ்விய சீர்மைகள் சுரந்து கின்றமையால் இவ ரை ஒரு தேவன் என்றே யாவரும் மேன்மையாக் கருதி வங்க னர். சார்ந்துள்ள பேர்கள் சால்புகளைத் துலக்கி நிற்கின்றன. தேவர் I திருவள்ளுவர் 2 தெய்வப் புலவர் 5 செங்காப் போதார் 4. சயனுர் 5