பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 1.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. இல் வாழ்க்கை 235 கான்முகனர் 6 மாதானுபங்கி 7 பொய்யில் புலவர் & பெருங்ாவலர் 9 முதல் பாவலர் IO இன்னவாறு இவருக்குத் திருநாமங்கள் அமைந்துள்ளன. இப் பெயர்கள் யாவும் காரணக் குறிகளாப் வர்திருக்கின்றன. மனம் புனிதமாய் ஒழுகி வந்தால் மனிதன் தெய்வமாப் ஒளி பெறுவான் என்பதை இவரால் எவரும் தெளிவாய் அறிய சேர்க் தனர். மயிலாப்பூரில் ஒரு கோயில் சமைத்து இவரையும் இவரது மனைவியையும் உருவங்கள் அமைத்து வைத்து யாவரும் உரிமையோடு வழிபாடு செப்து வருகின்றனர். இவர் மறைந்து ஆயிரத்து எண்ணுாறு ஆண்டுகளுக்கு மோலாகின்றன. ஆயி னும் இவர் புகழ் யாதும் தேயாமல் யாண்டும் நீண்டு கிலவு கின்றது. வையத்துள் ஒருவன் வாழ்வாங்கு வாழின் அவன் தெய்வத்துள் வைக்கப் படுவான் என்பதை உலகம் இவர்பால் மெய்யா உணர்ந்து மேலான நிலையைத் தெளிந்து கொண்டது. சீலமுடன் இல்வாழ்க்கை செய்வானைத் தெய்வமென ஞாலம் துதிக்கும் நயந்து. மனிதன் புனிதளுப் வாழின் தேவன் ஆகிருன். இந்த அதிகாரத்தின் தொகைக் குறிப்பு. இல்வாழ்பவன். எல்லார்க்கும் இனிய துணை. துறந்தார் எவரையும் அவன் புரந்து அருளுவன். தென்புலத்தார் முதலியோரை அன்புடன் பேனுவன். பழி படியாமல் பகுக் து உண்பன். அன்பும் அறனும் அவன் பண்புடைமைகள். அறநெறி ஒழுகி அதிசய கலங்களை அடைவன். இயல்போடு இல்வாழ்ந்து உயர் மகிமை பெறுவான். ஆற்றின் ஒழுக்கி அறன்வழி ஒழுகல் கோம்பினும் வலியது. நல்ல அறம் என அமைந்தது இல்லறவாழ்க்கையே. வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வமே. டு-வது இல்வாழ்க்கை முற்றிற்.ச.