பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 1.pdf/281

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

282 திருக்குறட் குமரேச வெண்பா மாட்சி மங்கலம்; மக்கட் பேறு மற்று அதன் கன்கலம் என்க. மங்கலம் = கலம், அழகு. கன்கலம் = நல்ல அணி. மாண்புடைய மனைவியும் கல்ல மக்களும் ஒருவனுக்கு எவ் வழியும் இன்பமும் பெருமையும் இனிது நல்குவர் என்பதாம். ஒரு பெண்ணுக்கு மனைமாட்சி மங்கலம்; மக்கட் பேறு ஈன்கலம் எனவும் இது பொருள் காண கின்றது. இதில் மங்க லம் என்றது தாலியை. இயற்கை அழகும் செயற்கை அணியும் போல் தக்க குணங்களும் மக்கட்பேறும் நன்கு மருவியுள்ளன. மனேக்கு விளக்கம் மடவார், மடவார் தமக்குத் தகைசால் புதல்வர், மனக்கினிய காதற் புதல்வர்க்குக் கல்வியே, கல்விக்கும் ஒதின் புகழ்சால் உணர்வு. (நான்மணிக்கடிகை 105) மனமாட்சி, மக்கட்பேறு, கல்வி, உணர்வுகளை விளம்பி நாகனர் இங்கனம் விளம்பியுள்ளார். மனையை விளக்கும் மனைவி மக்களால் விள்ங்குகிருள்; அம் மக்கள் கல்வியால் விளங்கு கிருர்; அக் கல்வி உணர்வு ஒழுக்கங்களால் ஒளி பெறுகின்றது. இல்லாள் நல்ல குணங்களையுடையளாயினும் பிள்ளைப்பேறு உற்ற பின்பே பிரியமும் மதிப்பும் கணவனிடம் பெருகி வரு கின்றன. குழவிகளைக் காணவே உள மகிழ்வு ஒங்குகிறது. மக்கட் பெறுதல், மடனுடைமை மாதுடைமை ஒக்க உடனுறைதல் ஊணமைவு-தொக்க அலவலே அல்லாமை பெண்மகளிர்க்கு ஐந்து தலைமகனேத் தாழ்க்கு மருந்து. (சிறுபஞ்ச மூலம், 58) கணவனே வசப்படுத்த உரிய அரிய மருந்து ஐந்து மனைவி யிடம் உள்ளமையைக் காரியாசான் இவ்வாறு கூறியிருக்கிருர், கல்விருந்து ஓம்பலின் கட்டாளாம்; வைகலும் இல் புறம் செய்தலின் ஈன்றதாய்;--தொல்குடியின் மக்கட் பெறலின் மனேக்கிழத்தி; இம்மூன்றும் கற்புடையாள் பூண்ட கடன். (திரிகடுகம், 64) இல்லாளின் நல்ல நீர்மைகளை நல்லாதனுர் இங்கனம் சொல் லியுள்ளார். உரிய தனையாப் உசவி அரிய காயாய் அருள்புரிந்து அமைந்தவள் மக்களைப் பெற்றபின் நல்ல மனைவி ஆகின்றுள்,