பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 1.pdf/285

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

286 திருக்குறட் குமரேச வெண்பா டினத்தார் தம் பேற்றைக் குறித்து இவ்வாறு உவந்து உரைத் துள்ளார். பெறலரும் பேறு எது? பேரறிவுடைய மகவே. பெறும் அவற்றுள் = பெறத் தக்க பொருள்களுள். செல்வம் கல்வி அதிகாரம் சுகபோகங்கள் முதலிய உயர் கலங்களே மனிதன் பெறவிரும்புகிருன் கனக்கு வேண்டும்என்று உள்ளம் விழைக் து அவன் பெறுகின்ற எல்லாப் பொருள்களி லும் பிள்ளைப்பேறு மிகவும் மேலாப் உள்ளது. அவ்வுண்மை ஈண்டு துண்மையா உணர்ந்து மகவின் தகவைத் தெளிகிருேம். நல்ல அறிவுடைய பிள்ளைப் பேறே பெரிய செல்வம்; ஒரு வன் பெறவுரிய பொருள்களுள் அதனினும் உயர்ந்த பாக்கியம் வேறு பாதும் இல்லை என்பதாம். அறிவறிந்த என்னும் அடைமொழி தக்க மக்களை மிக்க கவனமா எடை தாக்கி நோக்கி இனிது உணர் வக்கது. அறிவு அறியாத மூடமக்களைப் பெறுவது பெரிய பீடை ஆதலால் அக் தப் பிழைகளை இது களைந்து கின்றது. பறழ்பல பன்றி பயப்பினும் என்மன் கறையடி சுட்டு அறும் கன்ஆறு ஒன்று ஈன்ருலும் பிறைபோல் அறிவு பெறுமகவு ஒன ஆறு உறின உறுவ வேறென் உள? (இன்னிசை) பொற்பறிவில் லாதபல புத்திரரைப் பேறலின் ஒர் கற்புதல்வ சீனப்பெறுதல் கன் ருமே---பொற்கொடியே பன்றி.பல குட்டி பயந்ததில்ை ஏதுபயன் ஒன்றமையா தோகரிக்கனஅ ஒது. (நீதிசாரம்) நன்றிதரும் பிள்ளேஒன்று பெற்ருலும்குலமுழுதும் நன்மைஉண்டாம்; அன்றி அறி வில்லாத பிள்ளேஒரு நாறுபெற்றும் ஆவதுஉண்டோ? மன்றில்கடம் புரிவாரே தண்டலையாரேசொன்னேன் வருடந்தோறும் பன்றி.பல ஈன்றும் என்ன குஞ்சரம்ஒன்று ஈன்றதல்ைபயனுண்டாமே, (படிக்காசர்) அறிவில்லாத பிள்ளைகள் பலர் பிறந்தாலும் பலன் இல்லை; அறிவுடைய மகன் ஒருவனே எனினும் அப்பேறே பெரு மகிமை பாம் என இவை குறித்துள்ளன. பன்றிக் குட்டிகள் அறிவில் லர்த மட்டிகளுக்கும், யானைக்கன்று அறிவுடைய மகனுக்கும் உவமையாய் வந்தன. பழி இழிவும், விழுமிய உயர்வும் முறையே விழி தெரிய கின்றன. இழிவைப் பெறுவது அழிவைத் தரும்.