பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 1.pdf/331

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

332 திருக்குறட் குமரேச வெண்பா அன்பை பாதும் ம ைற க் க இயலாது; எல்லார்க்கும் எளிதே அது தெளிவாய்த் தெரிய வரும் என்பார் அடைக்கும் தாழ் உண்டோ? என்ருர். இல்லை என்பது குறிப்பு உம்மை அன்பின் இயல்பையும் உயர்வையும் உணர்த்தி கின்றது. அடைத்தல்=தடுத்தல், மறைத்தல். தாழ் என்றது கதவை இறுகப் பிணித்திருக்கும் கருவியை. காழ்க்கோல், காட்பாள் என இது வழங்கப்படும். வலிய இரும்பால் செப்திருப்பது ஆதலால் பாதுகாப்புக்கு இது மிகவும் திண்மையான உறுதியாம்.

  • தாழ்செறி கடுங் காப்பு" (கலித்தொகை) வயிர்த் தாழ் கொளுவி" (சீவகசிந்தாமணி) "பொறித் தாழ் க்ேகி பெருங்கதை

'கிறைதரு சாலை தாழ் க்ேகி" (இராமாயணம்) தாழ்ஒன்று இலது ஆயின்” (நனனெறி) இவற்றுள் தாழ் உணர்த்தி கிற்கும் கிலேயை அறியலாம். . . A அன்பின் கிறைவு ஆர்வம், அதனே யுடையவர் ஆர்வலர். பேரன்பால் உருகி அழுபவர் ஈண்டு ஆர்வலர் என நேர்ந்தார். பூசல் என்னும் சொல் ஆரவாரமான பெரிய ஓசைகளை உணர்த்தி வரும். அலறி அழுகிற போரொலி பூசல் ஆம். பூசல் மகளிர் கைம்மை கூர. (ւլյուն,25) ஒய்எனப் பூசல் இடுவேன். (கலி, 147) பூசல் நிலையை இவ் வாசகங்கள் துலக்கியுள்ளன. வரையார் தோள்பொடி யாடி வைகுவாய்! தரை மேலாயுறு தன்மை ஈதுஎனக் கரையாதேன் இடு பூசல்கண்டும் ஒன்று உரையாய் என்வயின் ஊனம் யாவதோ? (இராமா, கிட்கி, அரசு 8) வாலி இறந்தபோது அவனுடைய மனைவி காரை அன்பால் உருகி அழுததை இது உணர்த்தியுளது. 'கரையாதேன் இடு பூசல் கண்டும் ஒன்று உரையாப்!” என அவள் பருவரலோடு உருகி மறுகி உரையாடியுள்ளமை இங்கே கருதி யுணர வுரியது.