பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 1.pdf/341

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

342 திருக்குறட் குமரேச வெண்பா அன்பும் என்பும் உயிரும் பிறப்பும் சிறப்போடு இங்கே பார்வைக்கு வந்துள்ளன. பிறர்க்கு இதமாப் உதவி புரிவதே அன்பின் பயன் என முன்பு குறித்தார்; அதனை நன்கு செய்யவே சிறந்த மனிதப்பிறவி தோன்றியுள்ளது என்று இதில் உறுதியா வலியுறுத்துகிருர் அறிவுடையபிறப்புக்குச்சிறப்பு:அன்புபுரிவதே. ஆர்உயிர் என்றது சிறக்க அறிவு கலங்கள் நிறைந்து உயர்ந்த மனித உருவில் மருவி வருகிற அதன் மகிமை தெரிய வந்தது. அறிவுடைய அரிய உயிர் அறிவில்லாத வறிய உடலைப் பொருத்தி வருதற்கு உரிய காரணத்தை நயமா நன்கு உணர்த்தி யருளினர். வழக்கு = வழிமுறையே வழங்கி வரும் இயக்கம். தொடர்பு=இடைவிடாமல் ஒட்டி வரும் உறவு. அரிய உயிர்க்கு உடம்போடு இசைக்க வரும் இயக்கம் அன்போடு பொருந்தி வருகிற இனிய முயக்கமே என்பதாம். என்பு என்று சுட்டிக் குறித்தது அன்பு செப்ய வுரிய உடம்பின் அமைதி கெரிய. என்பு இல்லாத இழிக்க புழு முதலிய உடம்புகளில் இயையாமல் என்பு உடைய உயர்ந்த மனித உரு வில் இயைக்கது. புனிதளுப் இனிய அன்பு செய்யவே யாம். உரிமைக்கு வாதாடுவது வ ழ க் கு என வந்தது. உயிர் என்போடு இசைந்தது அன்போடு இசைக்க வரவே; அவ்வாறு இசையாவழி அது எவ்வழியும் பெரிய வசையாம். உயிரும் உடம்பும் கனிக் கனியே பிரிந்திருந்தால் இனித்த கருமங்கள் யாதும் செய்யா; ஒன்ருப் இணைக்க பொழுதுதான் சன்ருன தருமங்களை உரிமையோடு நாடிச் செய்கின்றன. உயிர் எழுத்தும் மெய் எழுத்தும் கூடிய வழியே ஒலிகள் தோன்றி மொழிகள் உளவாகின்றன; பொருள் உணர்வுகள் விரிந்து அறிவு கலங்கள் வளர்ந்து வருகின்றன; அதுபோல் உயிரும் உடலும் இசைந்தே கருமங்கள் புரிகின்றன; கருமங் களை விளைக்கின்றன; அரிய அறங்களுக்கெல்லாம் அன்பு மூல முதலாயுள்ளது அகல்ை உயிர் இன்ப நிலையில் உயர்கின்றது. ஒருவன் அன்பு செய்துவரின் அக எல்லா உயிர்க்கும் இன்பம் பயந்து வரும்; வரவே அதனைச் செய்தவன் புண்ணிய வாயுையர்ந்து பேரின்ப நிலைகளை அடைகிருன். ஆன்ம ஊதிய