பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 1.pdf/340

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. அன்புடைமை 341 என்பும் ஆங்கு அளித்தனன் இருந்தவத்தினேன் அன்பினர் யாதுமற்று அருள்க லாததே? (3) (பாகவதம், 65) இவர் உதவியுள்ளதைச் சுகமுனிவர் இவ்வாறு உவந்து கூறி யுள்ளார். என்பும் அளித்தனன்; அன்பினர் அருள்கலாதது யாது? என்னும் ஈது இங்கே சிந்திக்கவுரியது. தேவர் வாய்மொழி விேய ஒளியோடு தேசு மிகுந்து ஈண்டு மேவி மிளிர்கின்றது. நாய்கமது என கரி நமதுஎனப் பிதா தாய் நமது என நமன் தனது எனப் பிணி பேய்கமது என மனம் மதிக்கும் பெற்றிபோல் ஆய்நமது எனப்படும் யாக்கை யாரதே? (1) நடுத்தயா விலார்தமை கலியத் துன்பநோய் அடுத்தயா வரும்திரு வடைய யாக்கையைக் கொடுத்தயா அறம்புகழ் கொள்வனே எனில் எடுத்தயாக்கையின் பயன் இதனின் யாவதே? (2) (திருவிளேயாடல்) அமரர்கோனுக்கு ஆதரவோடு இவர் உதவி புரிந்துள்ள நிலையை இதுவும் உணர்த்தியுள்ளது. அன்பு உடையார் என்பும் பிறர்க்கு உரியர் என்பதை உலகம் இவர்பால் உணர்ந்துவியக்கது. உள்ளன் புடையார் உயிரும் உதவுவார் எள்ளளவும் ஈயார் இலார். அன்புடையவரே யார்க்கும் ஆதரவு புரிவர்.

=

73. ஆனிரைபால் அன்பால் அருந்தவனேன் மூலனெனும் கோனுடம்பைக் கொண்டான் குமரேசா-ஆனதினல் அன்போ டியைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு என்போ டியைந்த தொடர்பு. (E) இபள். குமரேசா ! பசுக்கள் பால் கொண்ட அன்பால் மூலன் உடம்பை அருந்தவன் என் பொருக்தி கின்ருன்? எனின், ஆர் உயிர்க்கு என்போடு இயைந்த தொடர்பு அன்போடு இயைந்த வழக்கு என்க. என்ப என்றது. பழமையின் வளமை தெரிய.