பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 1.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 திருக்குறட் குமரேச வெண்பா வல்லதாயது. அதன் வன்மையும் தன்மையும் நன்மையும் அறிய வந்தன. எல்லாம் வல்ல இறைவன் கிலை மழையிலும் உள்ளது. உரிய பொழுது உரிய அளவு பெய்வது பருவ மழையாம்; அத்தகைய இனிய மழை கரும நிலையால் உரிமையாஅமைகிறது. கல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு எல்லார்க்கும் பெய்யு மழை. (மூதுரை, 10) மழைக்கும் கல்லார்க்கும் உள்ள தொடர்பையும் தூய உற வையும் ஒளவையார் இவ்வாறு செவ்வையா விளக்கியிருக்கிரு.ர். மாதரார் கற்பில் கின்றன கால மாரியே. (இராமாயணம்) மழைவளம் சுரக்கு மாறும் வயல்கிலம் விளையு மாறும் விழை அறம் வளரு மாறும் வேதநூல் விளங்கு மாறும் தழைபொருள் ஈட்டு மாறும் சமரிடை வெல்லு மாறும் பிழைதப வாழு மாறும் பிறழ்தராக் கோலின் ஆகும். (விநாயகபுராணம்) செக்தி முதல்வர் அறம்கினேந்து வாழ்தலும் வெஞ்சின வேந்தன் முறைநெறியில் சேர்தலும் பெண்பால் கொழுநன் வழிச்செலவும் இம்மூன்றும் திங்கள்மும் மாரிக்கு வித்து. (திரிகடுகம்) வேதம் ஒதிய வேதியர்க்கு ஒர்மழை திே மன்னர் நெறியினுக்கு ஒர்மழை மாதர் கற்புடை மங்கையர்க்கு ஒர்மழை மாதம் மூன்று மழைஎனப் பெய்யுமே. (விவேகசிந்தாமணி) பருவ மழைக்கு உரிய உரிமைகளை இவை காட்டியுள்ளன. மழையின் விழுமிய நீர்மை இதனுல் வெளியாய் நின்றது. மாரி மாறி நின்ருல் மாகிலம் துயராய் மறுகும்; அது பெப் கால் உயர்வாப் ஒளிபெற்று விளங்கும் என்பது இதில் உணர்த் தப்பட்டது. இவ்வுண்மை உரோமபகன் பால் உணரப்படும். சரிதம். உரோமபதன் என்பவன் உக்கான பாகன் என்னும் அரச லுடைய அருமைத் திருமகன். சிறந்த நீதிமான். யா ரா லும் வெல்லமுடியாத அதிசய ஆற்றல்கள் உடையவன். சக்தியமும் தண்ணளியும் தரும குணநீர்மைகளும் ஒருங்கே நிறைந்த பெருக்