பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1364 திருக்குறட் குமரேச வெண்பா

கண்மா றாடவர் ஒடுக்கம் ஒற்றி வயக்களிறு பார்க்கும் வயப்புலி போலத் துஞ்சாக் கண்ணர் அஞ்சாக் கொள்கையர் அறிந்தோர் புகழ்ந்த ஆண்மையர். (மதுரைக்காஞ்சி)

கள்வருடைய கருவி வகைகளையும் உருவ நிலைகளையும் உடை கடை முதலிய செயல் இயல்களையும் இதில் வியந்து காணுகிறோம். தொடுதோல் =செருப்பு. கண்மாறு ஆடவர் = விழித்தகண் இமைக்கு முன்னே விரைந்து மறைந்த போம் கள்வாரை. களவினிலுள்ள கார் அறிவையும் கடிய ஆண்மையையும் இங்கே கண்டு கள்வரின் நிலைமையை ஒர்ந்து உணர்ந்து கொள்கின்றோம். அறிவை நல்ல நெறியில் செலுத்தாமல் பொல்லாத புலைக் களவில் புகுக்கி வருதலால் கள்வர் என இழிந்து அல்லல் பல அடைந்து அழிந்து ஒழிகின்றார், அவ்வாறு இழிந்து ஒழியாமல் தெளிந்து வாழவே நூலோர் சால் போடு போதித்து வருகின்றார்..

களவின் ஆகிய காரறிவு உள்ளன் மின் விளைவில் வெவ்வினை வீவில் கதிகளுள் உளைய வுள்ளழித்து ஒன்றல வேதனை வளைய வாங்கி வருத்தம் உறுக்குமே. (வளையாபதி)

கள்ளர்க்கு நல்ல புக்கியை இங்.நூலாசிரியர் இவ்வாறு செவ் வையாய்ப் போதித்துள்ளார். இம்மையிலும் மறுமையிலும் கொடிய துயரங்களை விளைத்தலால் களவை ஒழித்து கலமாய் ஒழுகி வருவோனே தன் உயிர்க்கு நன்மை செய்தவனாகிறான். களவின் ஆகிய காரறிவு என இதன் கண்ணும் வந்துள்ளது. பிறர்பொருளை விழைந்து கள்ளம் புரிந்து, கடும் பழி படிந்து கொடுத்துயர் அடைய நேர்வது கொடிய நெடிய மடமையே.

பிறர் பொருள் அன்னார் உணராது பெட்பின் சிறிய கொளினும் அவை நஞ்சினும் தீய இறைவன் ஒறுக்கும் பிழைப்பினும் என்றும் உறைப இருள்சேர் உலகு. (இன்னிசை)

களவு நஞ்சினும் தீயது; அதனை நெஞ்சில் கொண்டால் நெடுங் துயர் விளையும், நீசமான களவை நினையாது ஒழிவதே யாண்டும் விழுமிய மேன்மையாம் என இது விளக்கி யுளது.