பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/255

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1454 திருக்குறட் குமரேச வெண்பா பகைவரிடக்கம் சினத்தை அடக்கி வந்துள்ள ஒரு சோ மன்னனேக் குறிக்கக் காப்பியனர் என்னும் சங்கப் புலவர் இங் எனம் வியந்து புகழ்ந்து பாடியிருக்கிரு.ர். சினம் அடங்கினல் அங்க மனிதன் சிறந்த சாக்க சீலனுய் உயர்ந்து எவ்வழியும்ஒளிமிகுந்து யாண்டும் மேன்மை கோய்ந்து திகழ்கிருன். பேரின்ப நிலை அவனிடம் பெருகி வருகிறது. சினந்தனை அற்றுப் பிரியமும் தான் அற்றுச் செய்கைஅற்று நினைந்ததும் அற்று நினையாமையும் அற்று நிர்ச்சிந்தனுய்த் தனந்தனி யேயிருந்து ஆனந்த நித்திரை தங்குகின்ற அனந்தலில் என்றிருப்பேன் அத்தனேகயி லாயத்தனே, (பட்டினத்தார்) சினம் நீங்கி மனம் அமைதியாயிருக்கும் புனித நிலையைப் பட்டினக்கார் இவ்வாறு ஆண்டவனிடம் வேண்டி யிருக்கிரு.ர். சிக்க சாங்கி உத்தம ஞானத்தின் ஒளியாய் உதயமாகிறது. உயிர் அமுகமான அது சினக்கால் சிதைந்து போம்; போகவே புலைத்துயாங்களெல்லாம் வேகமாய் விரிந்து வரும். தன் உயிர்க்கு யாகொரு துயரமும் கோாமல் சீரோடு ஒருவன் பாதுகாக்க விரும்பின் சினத்தை எந்த வகையிலும் சிங்கையுள் புகாமல் ஒதுக்கி வர வேண்டும். அதளுேடு சிறிது. பழக கேர்க்காலும் கொடிய துயரம் சேர்ந்து விடும். தன்னைக் கொண்டவனது அறிவைக் கெடுத்து வெறியனுக்கி அவலக் கேடுகளை விளைப்பது ஆதலால் கோபம் கொடிய சண்டாளன் என்னும் நெடிய பழியை அது நேர்ந்த கொண்டது. உரியவனையே கொல்லும் இக் கொலை பாதகனை அருகே அணுக விடாதே; அணுகின் கொடிய அழிவுகள் விளைந்து விடும். கான் இழிந்து அழிந்து பட எந்த மனிதனும் விரும்பான்; உயர்ந்து வாழவே யாண்டும் யாவரும் விழைந்து வருகின்றனர். இயல்பாகவே இவ்வாறு உயர் கலங்களில் பிரியம் உள்ள உயிரி னங்கள் துயரினங்களுக்கெல்லாம் நிலையமான வெகுளியை எவ் வகையிலும் யாதும் மருவலாகாது. பற்றிய தீ உம்றசையெல்லாம் எரித்து ஒழிக்கல்போல்