பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27. த வ ம் 1237 னிய பலத்தால் இளமையிலேயே அரிய பெரிய தவம் புரிந்து இக் குலமகன் பரிபூரண வெற்றியை கேரே பெற்றிருக்கின்ருன். முன்னைய கவம் நன்னயமாய் வாயாதவன் சிறிய இடர் நேர்ந்தாலும் தனது கவ நிலையை இழந்து இழிந்து விடுவான். ஒரு வேளை கவம் முடிந்தாலும் அதன் பயனை முழுதும் அடை யாமல் இடையே பழுதடைந்து இழிவன். கல்ல கவ ஒழுக்கம் உடையார்க்கே கவ வேடம் உரிமை யாம்; தவம் இல்லார் அவ் வேடத்தைப் பூண்பது அவமாம் என்று இக் குறளுக்குப் பொருள் கொள்ளலாம்; ஆயினும் அது இங்கே அவ்வளவு சிறப்பு அன்று. வஞ்ச வேடத்தின் வசையை அடுக்க அதிகாரத்தில் தனியே காணலாம். எப்படியும் இப்பொழுது தவம் செய்! அதன் பயன் கை கூடாமல் தவறினும் பின்பு உரமாய் அது உறுதியே தரும். ஒருமைக்கண் கற்ற கல்வி எழுமைக்கும் ஏமாப்பு ஆதல் போல் இன்று உற்ற தவம் என்றும் பலமாய் கலமே தரும். உயிர்க்கு உயர்வான உய்தியைத் தருகின்ற தவத்தை உள்ளத் தாய்மையோடு யாண்டும் உறுதி பூண்டு செய்ய வேண் டும். தீமை கோயின் அது தீங்காய்ப் பிழை படும். இவ் வுண்மை கும்பகன்னன், சம்பார்பால் தெரியகின்றது. ச ரி க ம் 1. இலங்கை வேந்தன் கம்பி ஆகிய கும்பகருணன் சிறந்த தீரன். உடல் வன்மையும் அடலாண்மையும் இவனிடம் உயர் நிலை களில் இங்கி கின்றன. தேவர் முதல் யாவரையும் வெல்ல வேண் டும் என்று உள்ளம் துணிந்து இவன் ஊக்கித் தவம் செய்தான். அரிய பெரிய பயனை அடைய விரும்பியதால் கெடுங்காலம் இவன் கடுங் தவம் புரிந்தான். இவனுடைய தவ நிலைகளை யாவரும் வியந்து கோக்கி வெருண்டு மருண்டு அஞ்சினர். கும்பகன்னன் ஐந்தியுள் கொதிக்கும் காலத் திடை நின்றும் உம்பர் நடுங்கக்கார்காலத்து ஒவ்வாமழையின் உடல்நனைந்தும் தம்பம் பொருநா ராசத்துச் சலியா திருந்தும் சயித்தியத்தில் அம்பின் முழுகிக்கிடந்துழந்தும் ஆண்டு பதியிைரம் கழித்தான்.