பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27. த வ ம் 1271 மறந்து போகிருன். புற நிலைகளிலேயே புலையாய்ப் பொங்கி அலைகிருன். இன்ன ஊாான், இன்ன நாட்டான், இன்ன குலக் கான், இன்ன மதத்தான் என்று இன்னவாறு பன்னிப்பேசிப் படு செருக்குடன் பாழாயழிகிருன். அவ்வாறு இழிந்து கழிக் து ஒழிந்து போகாமல் தெளிந்து கின்று தனது உண்மை நிலையை உணர்ந்து உயிரை உரிமையாகப் பெறுவனுயின் அவன் பெரிய ஞானியாய் அரிய மகானுய்ப் பாக்துவ உயர்வை மருவுகின்ருன். கோடிகள் யாவும் அவனே உவந்து புகழ்ந்து உரிமையோடு யாண்டும் விழைந்து தொழுகின்றன. o - -h *To தேவ நிலையை மருவவே சவ மாய மருள்கள் கழியவே உயிர் இயல்பான தாய ஒளியைப் பெறுகிறது. அங்கனம் .ெ ப ம் உயிரை அவ்வாறு பெருக உயிரினங்கள் தொழுது துதிப்பது இயல்பாகின்றது. உலக ஆசைகளில் ஓடாமல் புலன்களை அடக்கித் தன் உயிரைத் தனக்கு உரிமையாகப் பெற்றிருக்கிற ஞானியை ஞாலம் கொழுது வருவதை கேரே காம் அறிந்து வருகிருேம். தனது உண்மை நிலையை அறிக்க அளவே புன்மைகள் யாவும் ஒருங்கே ஒழிந்து போகின்றன; போகவே புனித மேன்மைகள் பெருகி அரிய இன்பங்கள் மருவி வருகின்றன. தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை தன்னை அறியாமல் தானே கெடுகின்ருன் தன்னே அறியும் அறிவை அறிந்தபின் தன்னையே அாச்சிக்கத் தானிருந் தானே. (திருமந்திரம்) தன் உயிரின் உண்மையை உணர்ந்து உரிமையாப் பெற்ற வன் சிறுமைத் துயர்கள் நீங்கிச் சிறங்க மகிமைகளை அடைகிருன் எனத் திருமூலர் இங்ஙனம் தெளிவாய்க் குறித்திருக்கிரு.ர். தன்னையும் தனக்குஆதாரத் தலைவனையும் கண் டானேல் பின்னே அத் தலைவன் தானுய்ப் பிரமமாய்ப் பிறப்புத் தீர்வன் உன்னை நீ அறிந்தா யாகில் உனக்கு ஒரு கேடும் இல்லை என் ஜனநி கேட்கை யாலே ஈதுப தேசித் தேனே. (கைவல்லியம்) பொய்யான புலைகளைக் கடந்து மெய்யான உயிர்கிலையை அறிந்தபோது மேலான பாமன் அங்கே மேவி மிளிர்கிருன். அந்த உண்மையை இங்கே ஊன்றி உணர்ந்து கொள்கிருேம்.